வளைகுடா பகுதியில் பயங்கரவாதத்திற்கு கத்தார் ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தி, கத்தாருடனான தங்கள் ராஜிய உறவுகளை பல நாடுகள் துண்டித்துவிட்டன. பஹ்ரைன், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உள்ள கத்தார் நாட்டினர் இரண்டு வாரங்களில் அந்நாடுகளிலி்ருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கத்தார் மறுக்கிறது; "வெளிப்படைத்தன்னையுடனும் நேர்மையுடனுமான பேச்சுவார்த்தைகளுக்கு`` பிற நாடுகளை கத்தார் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியிலிருந்து, மறு அறிவிப்பு வரும் வரை, எகிப்து வான்பரப்பு கத்தார் விமான சேவைகளுக்கு மூடப்படும் என எகிப்து தெரிவித்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்துகளை இணைக்கும் முக்கிய தளமாக கத்தாரின் தலைநகர் டோஹா இருப்பதால், போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கத்தார் ஏர்வேஸ், எத்திஹாட் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தார் நாட்டின் மேற்கில், பெரி்ய நாடாக இருக்கும், சவுதி அரேபியாவின் வழியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றால் கத்தார் நாட்டு விமானங்கள், கூடுதல் தூரப் பாதைகள் மூலம் பயணிக்க வேண்டும், எனவே பயண நேரமும் அதிகமாகும்.
இருப்பினும் கத்தார் விமானங்கள், சர்வதேச கடல் பகுதி என்றும் சர்வதேச வான்வெளியில் பறக்க முடியும் என்று கத்தாரின் வெளியுறவு அமைச்சர், ஷேக் முகமத் பின் அப்துல் ரஹ்மான் அல்- தனி, அல்ஜசிரா தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
சோமாலியாவிற்கு உட்பட்ட வான்பரப்பை, வழக்கத்தைவிட அதிகமாக திங்கட்கிழமை 15 கத்தார் விமானங்கள் பயன்படுத்தியதாக, பெயர் வெளியிடாத சோமாலி அதிகாரி ஒருவர் ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.