
தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் திங்களன்று துண்டித்துக் கொண்டன. கத்தாரின் வளைகுடா பகுதி அண்டை நாடுகள், கத்தாருடனான எல்லையையும் மூடி விட்டன.
இந்நிலையில் கத்தார் வாழ் இந்தியர்களின் உடமைக்கும் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலும் பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.
44255777, 55575086, 50536234, 55512810, 55532367, 66013225 என்ற எண்களில் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தை labour.doha@mea.gov.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advisory for Indian Nationals in Qatar pic.twitter.com/BdqsskDPov
— India in Qatar (@IndEmbDoha)
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.