"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
26/5/17

ரமலான் மாதம் வந்து விட்டால் என்றாலே போது வி.களத்தூர் மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சி தான்.  கடந்த சில நாட்களாக வி.களத்தூரில் ரமலானை வரவேற்க்க பள்ளிவாசல்களும், ஊரில் உள்ள அனைத்து வீடுகளும் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

நமதூர் பள்ளிவாசல்களுக்கு தராவீஹ் தொழுகை வைக்க இமாம்கள் தயார் நிலையில் உள்ளனர் .சில இடங்களில் வடை, பச்சி, சம்சா, போண்டா போட கடைகள் ரெடி! இரவில் விடிய விடிய இயங்க டீ கடை ரெடி! நோன்பு கஞ்சி செய்ய ஆட்களும் ரெடி!!!

இரவு தராவீஹ் தொழுகைக்கு பிறகு வி.களத்தூர், மில்லத்நகர் பகுதியில் சங்கத்தின் உறுப்பினர்கள் இரவு ஊர் முழுவதும் தெரு தெருவாக இஸ்லாமிய பாடல்களை பாட தயார் நிலையில் உள்ளனர்... அனைத்தும் தயார் நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன...?

ஐந்து கடமைகளில் ஒன்றான ரமலான் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி உணவு உண்டு சுபஹ் காலையில் இருந்து மாலை வரை இறைவனுக்காக உண்ணாமலும் பருகாமலும் இருந்து இறையச்சத்தை அதிகப் படுத்த வேண்டிய மாதம் இந்த ரமலான் மாதம்.

அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் தொடர்பை வழுப்படுத்தும் வேண்டும். எண்ணங்களில் அன்னங்களை அகற்றி அல்லாஹ்வை நினைவுக் கூறச் செய்ய வேண்டும். ஔவியத்தை விட்டு அகன்று அண்டை வீட்டாருடன் அன்பாய் இரு வேண்டும்.

இது போல் பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்....

இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் இந்த ரமலானை முழுவதையும் அடைய அல்லாஹ் அருள் புரிவனாக...  - ஆமின்

- முஹம்மது பாரூக்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.