தூங்கும் வேலையை சிறப்பாகச் செய்தால் வருடத்திற்கு 20,000 சிங்கப்பூர் டொலர்களை (சுமார் 21,69,000 ரூபா) சம்பளமாக வழங்குகிறது சீன நிறுவனமொன்று.
பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ (Nao Baijin) இந்த அரிய வாய்ப்பை வழங்குகின்றது.
சீன இணையவாசிகளால் ‘உலகின் மிக சொகுசான வேலை’ என்ற பாராட்டை இது பெற்றுள்ளது.
இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், நிறுவனத்தின் பொருட்களை சோதிக்கத் துணைபுரிவார்கள்.
நிறுவனத்தால் வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருளை உட்கொண்டு, அது தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்பதே இவர்களின்
பிரதான வேலை.
இந்த வேலை சீனாவில் இப்போது பிரபலமடைந்து வருகிறது.
தற்போதைய பரபரப்பான உலகில் பலரும் முறையாகத் தூங்குவதில்லை. தூக்கமின்மையால் அவதியுறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்தே தூக்கத்தைச் சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மருத்துவ உலகம்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.