"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
23/3/17

தொப்பை வர அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு முறைகள் ஒரு காரணமாக இருந்தாலும், வேலை செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது தான் முக்கிய காரணமாகும். எனவே இயற்கையான முறையில் தொப்பையை குறைக்க அற்புதமான வழி இதோ!
தேவையான பொருட்கள்
  • வெள்ளரிக்காய் - 1
  • எலுமிச்சை - 5
  • புதினா இலைகள் - 15
  • துருவிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 2.5 லிட்டர்
செய்முறை
வெள்ளரிக்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் நறுக்கிய புதினா, 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
அதன் பின் அதில் இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி, அதனுடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் போட்டு நன்றாக கிளறி, அதை 24 மணிநேரம் ஊற வைத்தால், பானம் தயார்.
குடிக்கும் முறை
இந்த பானத்தை ஒவ்வொரு நாளும் செய்து தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வந்தால், வேகமாக தொப்பை குறைவதைக் காணலாம்.
நன்மைகள்
  • வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு என்பதால் இது உடலின் அல்கலைன் அளவை சீராக்கி, வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.
  • எலுமிச்சை பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்துவதுடன், உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றுகிறது.
  • புதினா இலையானது, உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்தி, வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
  • இஞ்சியானது நமது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்கள் உடலில் சேர்வதை தடுக்கிறது.
  • தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கிறது. மேலும் இது உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கிறது.
குறிப்பு
தொப்பை அதிகமாக இருப்பவர்கள் இந்த ஜூஸை தினமும் உடற்பயிற்சியுடன் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காணலாம்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.