"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
7/2/16

திருமண வாழ்க்கையில் நுழைய எவ்வளவு ஆசை இருக்கிறதோ, அதே அளவு பயமும் இருக்கும் மணமக்களுக்கு. இதுவரை,
நமது வாழ்வில் செய்த அனைத்துக்கும் நாம் மட்டுமே பொறுப்பு, அதன் தாக்கங்கள் நம்மிடத்தே மட்டுமே இருந்தன.
ஆனால், இனிமேல் அப்படி இல்லை. நாம் செய்யும் எந்த காரியமும் நம்மை சார்ந்திருக்கும் இன்னொரு நபரையும் பாதிக்கும். எனவே, அவரையும் நமதில் வைத்து
காரியங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயம் நேரிடும்.

இல்லறம் மற்றும் தாம்பத்திய உறவில் புரிதல் நிலைக்கவும், விரிசல் விழாமல் தடுக்கவும் ஐந்து விஷயங்களை நீங்கள் இருவரும் சேர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும்….

கடினமானது அல்ல இல்லறம் என்பது கடினமானது அல்ல என்பதை மனதளவிலும், உடலளவிலும் அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும். வீட்டை நல்வழி படுத்துதல்,
தாம்பத்தியத்தில் ஈடுபடுதலை இது குறிக்கிறது. இவை
இரண்டிலும் தான் பெண்கள் ஆரம்பக் கட்ட இல்லற வாழ்க்கையில் சற்று பயப்படுவார்கள்.

கடினமானது அல்ல
தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது ஆரம்ப நாட்களில் வலி ஏற்படுவது இயல்பு. இதை பெண்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மேலும், பிள்ளை வளர்ப்பு மற்றும்
குடும்பத்தை வழிநடத்துதல் போன்றவை பற்றி கற்றுக்
கொள்ள வேண்டும்.

விக்கல் எடுக்கும்
என்ன தான் வேலை பளு இருந்தாலும், ஆண்கள்
மனைவியையும், பெண்கள் கணவனையும் மறந்துவிடுவதில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
விக்கல் எடுக்கும்
வேலையில் அதிக நேரத்தை செலவிடுவதால்,
இல்லறத்தை யாரும் மறந்துவிடுவதில்லை.

அளவில்லாத காதலுக்கு இவை பெரிய தடையில்லை என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில், பெண் எப்போதுமே தன் கணவனுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்
என எண்ணுவாள்.

நம் கையில் தான் இருக்கிறது
நமது இன்பமும், துன்பமும் நமது கையில் தான் இருக்கின்றன என்பதை நாம் முதலில் புரிந்துக்
கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் இருவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்.

நம் கையில் தான் இருக்கிறது
கணவன், மனைவி உறவில் நேர்மை மிகவும் முக்கியம்.
உண்மையை மறைப்பது, போலியாக நடிப்பது நீண்ட
நாட்கள் நீடிக்காது. எனவே, எதுவாக இருப்பினும், முதலிலேயே பேசி முடித்துக் கொள்ள வேண்டும்.
இருவருக்கும் தூண்டுதல் ஏற்படும் எல்லா உணர்வுகளும் எல்லாருக்கும் பொதுவானது தான்.

பாசம் என்றால் பெண்ணும், காமம் என்றால் ஆணும் தான் முதலில் வெளிப்படுத்த வேண்டும் என்பது
பொய். எனவே, உணர்ச்சியை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும்.

இருவருக்கும் தூண்டுதல் ஏற்படும் பெண்களுக்கு முதலில் உறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படுவது மிகவும் இயல்பு. சில சமயங்களில் பெண்கள், இதை ஆண்கள் தவறாக எடுத்துக்
கொள்வார்களோ என்று வெளியே கூறாமல் தவிர்ப்பதும் உண்டு.

நம்பிக்கை வேண்டும் நம்பிக்கை மட்டுமே உறவை காப்பாற்றும் தொப்புள்கொடி.

இது அறுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கணவன், மனைவியுடைய வேலை.
நம்பிக்கை வேண்டும் சமூகம் மற்றும் மூன்றாம் மனிதர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, உங்கள் துணை மீது வைக்க வேண்டும். நல்ல புரிதல் இருக்கும் இடத்தில், பிரிதல் ஏற்படாது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.