ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றதும் தெரியவில்லை, அவர் வெளியே வந்ததும் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் ஏன் என நடிகை கௌதமிக்கு எழுந்துள்ள சந்தேகம்,
லட்சக்கணக்கான மக்களின் மனதில் எழுந்துள்ளது. ஏன் எனக்கும் கூட அந்த சந்தேகம் எழுந்துள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த போது பல்வேறு மக்கள் அவருக்காக பால்காவடி ஏந்தி பூஜைகள்
செய்தனர். அப்படியிருக்கையில், அவர் நலமாகிவிட்டார் என்றால், அவருக்காக பூஜை செய்த
மக்களை சந்தித்திருக்கலாம். மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுடன் பேசியதாக அந்த செவிலியர்களே கூறுகிறார்கள்.
அப்படியிருக்கையில் அவர் மக்களுடன் பேசியிருக்கலாம்.
உடல்நிலை சரியில்லை என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்கள், 75 நாட்களுக்கு பிறகு உயிரற்ற உடலாகத்தான் ராஜாஜி
அரங்கிற்கு கொண்டு வந்தார்கள்.
அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் அவர்கள் இறந்தபோது கூட அவரை அடக்கம் செய்த பின்னர் தான் இடைக்கால முதல்வர்கள்
பதவியேற்றார்கள். ஆனால், இப்போது தலைகீழாக நடந்துள்ளது.
அவரை அடக்கம் செய்வதற்கு முன்னரே இடைக்கால முதலவர் பதவியேற்றுள்ளார் என சீமான் கூறியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.