"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)

.

.
10/12/16

தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே உயிரிழந்து விட்டதாக மலேசியா நாட்டு பத்திரிகை ஒன்று பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து 74 நாட்கள் சிகிச்சை அளித்த நிலையிலும் ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக கடந்த 5-ம் திகதி அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமான தகவலை இத்தகவல் வெளியான நாளில் இருந்து ஜெயலலிதா உண்மையில் உயிரிழந்தது எப்போது என பல்வேறு சந்தேகங்களை ஊடகங்கள் எழுப்பி வருகின்றன. இந்நிலையில், மலேசியாவில் வெளியாகும் ‘மலேசியா நண்பன்’ என்ற பத்திரிகை ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், ‘ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7-வது நாளில், அதாவது செப்டம்பர் 29-ம் திகதியே உயிரிழந்துவிட்டதாக’ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ’ஒரு மாநிலத்தின் முதல்வர் இறந்த தேதியை மறைத்து, புதிய தேதியை வழங்குவதற்கு யார் அதிகாரம் வழங்கியது? பின்னணியில் இருந்தவர்கள் யார்? என கடந்த 5 நாட்களாக நீடித்த மர்மத்தின் திரை சற்று விலகியுள்ளது. இதன் தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருவதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.