தான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த போது இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சேவாக் களத்தில் இறங்கினாலே பயமாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இன்சமாம் உல் ஹக் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது;
நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த போது இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரரான சேவாக் என்னை பொறுத்தவரையில் எதிரணிகளை அச்சுறுத்தும் வீரராகவே திகழ்ந்தார். சேவாக் களத்தில் நின்று 80 ரன்கள் மட்டும் அடித்தால் கூட அணியின் ஒட்டுமொத்த ஸ்கோர் 300 ரன்களை கடந்து எதிரணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்துவிடும். சேவாக் எவ்வளவு நேரம் களத்தில் நின்றாலும் அவ்வளவு அதிகம் எதிரணி பந்துவீச்சாளர்கள் மனதளவில் சோர்ந்துவிடுவார்கள் என்று அந்த தொலைக்காட்சி பேட்டியில் இன்சமாம் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.