"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)

.

.
13/12/16

பெண்களுக்கான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. நமது நாட்டில் தினமும் ஏதாவது ஒரு செய்தி வந்த வண்ணமே உள்ளது. மக்கள் அனைவரும் படித்து விட்டால் பெண் கொடுமை ஒழிந்து விடும் என்று சொன்னோம். ஆனால் படித்த மக்களிடத்திலேதான் பெண் கொடுமை அதிகமாக உள்ளது.

பெண் சிசுவை கருவிலேயே ஸ்கேன் செய்து பார்த்து அழிப்பதும் பெரும் பாலும் படித்தவரகள் தான். அதே போல் நான் டாக்டர் நான் பொறியாளர் நான் இத்தனை லகரம் சம்பளம் வாங்குகிறேன். எனக்கு இத்தனை லட்சம் வரதட்சணையாக கொடுத்தாலே போச்சு என்று வீம்பு பண்ணுவதும் படித்த மக்கள்தான். மருமகளை உயிரோடு எரித்தவர்களும் அதிகம் படித்தவர்கள் தான்.

அழகில்லாத ஆண். பொருளாதார வசதியில்லாத ஆண். இவனை ஒரு பெண் விரும்பாவிட்டாலோ அல்லது வோறொருவனை விரும்பினாலோ கோபம் வெறியாக மாறி கொலை செய்வதோ வன் புணர்வில் ஈடுபடுவதோ முகத்தில் ஆசிட் வீசுவதோ நடந்து விடுகிறது. நமது சினிமாக்களால் ஒரு இளைஞன் என்று இருந்தால் அவன் யாரையாவது காதலித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் பரவலாக்கப்பட்டதும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

பெண்ணை வன்புணர்ச்சி செய்வதற்கும் காமத்திற்கும் தொடர்பு கிடையாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண்ணிடமிருந்து இன்பத்தை அனுபவிக்க எண்ணம் உள்ளவன் இது போன்ற அரக்கத்தனங்களில் ஈடுபட மாட்டான். டெல்லி பெண்ணை அந்த கயவர்கள் இரும்பு பைப்பினால் குடலையும் கிழித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட தலித் இளைஞர்கள் மற்ற சாதி பெண்களை விரும்புவதையும தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

அங்கும் காமம் என்பது பின்னால் சென்று ஆதிக்க சாதிகளுக்கு சரிசமமாக நாமும் நிற்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. ஒரு வகையில் இதனை அவர்கள் பார்வையில் தவறு என்றும் சொல்ல முடியாது.ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணை ஒரு இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 3 வயது சிறுமியை ஒருவன் பலாத்காரம் செய்துள்ளான் என்றால் இவை எல்லாம் மன நோயின் அறிகுறிகள். இவர்களுக்கு மனநல சிகிச்சை செய்யப்பட வேண்டும்.

தக்க தண்டனையையும பெற்றுத் தர வேண்டும். இறைவனைப் பற்றிய எண்ணம் மனிதர்களிடத்தில் மறைந்து வருவதும் இது போன்ற வன் புணர்வுகளுக்கு காரணம் எனலாம். தன்னைப் பெற்ற தாயும் பெண்தான். தனது மனைவியும் பெண்தான். தன் உடன் பிறந்தவர்களும் பெண்தான். தனக்கு பிறந்தவர்களும் பெண் இனம் தான். இந்த பெண்மக்களை வழி நடத்திச் செல்ல ஆண்களுக்கு சில சிறப்பியல்புகளை இறைவன் கொடுத்துள்ளான்.

அந்த சிறப்பியல்புகளை இந்த மனிதன் இறைவன் எதற்காக கொடுத்துள்ளான் என்ற சிந்தனா சக்தி தனக்கு இல்லாததால் அந்த பெண்ணை அடக்கி ஒடுக்கப் பார்க்கிறான். தனது பேச்சுக்கு மதிப்பு தரவில்லை என்றால் கொலை செய்து விடுகிறான். காதலிக்க மறுத்தால் வன் புணர்வு செய்து விடுகிறான். அல்லது முகத்தில் ஆசிட் ஊற்றி விடுகின்றான். இன்னும் சிலர் அந்த பெண்ணின் நடத்தையில் களங்கத்தை அபாண்டமாக சுமத்தி சமூகத்தால் ஓரம் கட்ட வைக்கப் படுகின்றனர். இதை எல்லாம் நம்மைப் படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இறப்புக்குப் பிறகு நாம் செய்யும் இது போன்ற குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்ற எண்ணம் மேலோங்கினால் மனதளவில் தவறுகளிலிருந்து திருந்த வாய்ப்புள்ளது. சந்தர்ப சூழ்நிலைகள் ஒருவனை தவறு செய்ய வைத்தால் அதற்கு கடுமையான தண்டனையும் பெண்களின் ஆடை விஷயங்களில் கவனமாக இருப்பதும் பெருமளவு குற்றங்களை குறைக்கலாம்.

பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருக்கின்றன அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில்31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால் அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார். முஸ்லிம் நாடுகளில் எய்ட்ஸ் நோய் மிகக் குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சோசியாலஜிஸ்ட் ரெவ.பால் சுல்லின்ஸ் கூறுகையில் இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் இவை பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. புர்கா (உடலை மறைக்கும் ஆடை) உண்மையிலேயே இவ்விஷயத்தில் நன்றாக வேலை செய்கிறது.

ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி உடல் முழுவதும் மறைத்தால் பெண்களை அவர்களது திருமணம் முடியும் வரை முந்தைய முறைகேடான பாலியல் உறவுகளில் இருந்து பாதுகாக்க முடியும் என கூறுகிறார்.சூசி இஸ்மாயில் இவர் திருமணம் மற்றும் விவகாரத்துக்கான அதிகாரி ஆவார். இவர் கூறுகையில் திருமணத்திற்கு முந்தையை பிந்தைய முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம்களிடம் குறைவாக இருப்பதற்கு அவர்களது மார்க்க ரீதியான வேர் காரணமாகும் .

இஸ்லாம் விபச்சாரத்தை தடைச் செய்கிறது. இளம் வயதில் இருந்தே முஸ்லிம்கள் பாலியல் ஒழுக்கம் குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றார்கள். என தெரிவித்துள்ளார்.தவறு செய்யும் மன நிலையில் உள்ள ஒரு ஆணையோ பெண்ணையோ எந்த சட்டங்கள் போட்டாலும் கட்டுப் படுத்த முடியாது. ஆனால் தவறு செய்யும் மன நிலையில் இல்லாத எத்தனையோ பெண்கள் வலுக்கட்டாயமாக இது போன்ற செயல்களில் ஈடுபடுத்தப்படவதை எந்த சமூகமும் அங்கீகரிக்காது.

உலகில் கற்பழிப்பு சம்பவம் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியல் :
1 அமெரிக்கா: 95136 
2 தென் ஆப்ரிக்கா: 52425 
3 கனடா: 24350 
4 ஆஸ்ட்ரேலியா: 15630 
5 இந்தியா: 15468 
6 மெக்சிகோ: 14373 
7 இங்கிலாந்து: 13395 
8 ஜெர்மனி: 8615 
9 பிரான்ஸ்: 8458 
10 ரஷ்யா: 6978 
11 தென் கொரியா: 6139 
12 பெரு: 5968 
13 ஸ்பெயின்: 5664 
14 ஜிம்பாப்வே: 5567 
15 தாய்லாந்து: 4020 
16 அர்ஜென்டினா: 3036 
17 வெனிஸுலா: 2931 
18 இத்தாலி: 2543 
19 பெல்ஜியம்: 2436 
20 ஜப்பான்: 235l
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.