"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/12/16

சவுதி அரேபியாவில் அரசுப் பயணமாக சென்ற ஜேர்மன் பாதுகாப்பு துறை அமைச்சர் அந்நாட்டில் இஸ்லாமிய உடையை அணிய மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் பாதுகாப்பு துறை அமைச்சரான Ursula von der Leyen என்பவர் ஜேர்மன் வரலாற்றில் முதன் முதலாக பாதுகாப்பு துறைக்கு தெரிவு செய்யப்பட்ட பெண் அமைச்சர் ஆவார்

சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலின் கட்சியை சேர்ந்த இவர் சில தினங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார். ரியாத்தில் இளவரசரான Mohammad bin Salman al Saud என்பவரை சந்திப்பதற்கு முன்னதாக பெண் அமைச்சருக்கு அந்நாட்டு இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா ஆடை கொடுக்கப்பட்டது.

ஆனால், ஆடையை வாங்க மறுத்த பெண் அமைச்சர் தனது உடையிலேயே இளவரசரை சந்திப்பதாக கூறியுள்ளார். பின்னர், பெண் அமைச்சரின் விருப்பத்தின்படி சந்திப்பு நடந்து முடிந்துள்ளது.

ஜேர்மன் அமைச்சரின் இந்நடவடிக்கை சவுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
‘இஸ்லாமிய உடையை அணிய மறுத்ததன் மூலம் அமைச்சர் சவுதி அரேபியாவின் பாரம்பரியத்தை அவமதித்துவிட்டார்’ என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பெண் அமைச்சர் பேசியபோது, ‘சவுதி அரேபியாவின் பழக்கவழக்கத்தை நான் மதிக்கிறேன். ஆனால், எனக்கும் சில கொள்கைகள் இருக்கிறது.
ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகளை தேர்வு செய்வது என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமையாகும். எனவே, சவுதியின் இக்கொள்கையில் தனக்கு முரண்பாடு இருப்பதால் புர்கா ஆடையை அணியவில்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க முதல் குடிமகள் மீச்செல் ஒபாமா, ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல், ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சவுதிக்கு சென்றபோது புர்கா ஆடையை அணிய மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.