"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/11/16

திறந்தவெளியில் மலம் கழிப்பதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதால் அதனை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக கிராமங்களில் தனிநபர் கழிப்பறை மற்றும் சமுதாய கழிப்பறைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அவ்வகையில், கேரள மாநிலத்தில் அனைத்து பகுதியிலும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்து, சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் நிறைவு பெற்ற நிலையில், திறந்வெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக கேரளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள தினத்தையொட்டி இந்த அறிவிப்பை மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு துறைச் செயலர் பரமேஸ்வரன் அய்யர் இன்று வெளியிட்டுள்ளார்.

‘கேரள மாநிலம் தற்போது திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக உருவாகி உள்ளது. நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக மாறியிருக்கின்றன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேரள மாநிலம் உருவான இந்த நாளில், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றிருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதற்கு முன் இமாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலங்கள் என அந்தந்த மாநிலங்கள் அறிவித்தன. குஜராத், அரியானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களும் இந்த வரிசையில் விரைவில் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.