பிரிட்டீஷ் அரசுக்கு சொந்தமான, ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்பகுதியில் அமைந்துள்ள ஆர்க்னி தீவு (Orkney) கூட்டத்தின் 2 குட்டித்தீவுகளான வெஸ்ட்ரே (Westray) மற்றும் பாப்பா வெஸ்ட்ரே (Papa Westray) இடையே பறக்கும் குட்டி விமானம் தனது 10 லட்சமாவது (1 மில்லியன்) பயணியை சுமந்து சென்று சாதனை படைத்தது.
இன்னும் படிங்க! ஸ்காட்லாந்தின் லோகான் ஏர் (Logan Air) நிறுவனத்தால் 1967ஆம் ஆண்டு முதல் பறக்கும் இந்த விமானத்தின் மொத்த இருக்கையே 8 தான். இதில் 10,000 முறையாக பயணம் செய்த தி ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்தின் வங்கி ஊழியர் அன்னி ரேண்டல் என்ற பயணியும் இந்த சாதனை பயணத்தின் போது கௌரவிக்கப்பட்டார்.
சுமார் 2.7 கி.மீ. (1.7 மைல்) தூரமேயுள்ள இந்த விமான பயணம் 2 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் மேலும் பலமான காற்றடித்தால் 47 நொடிகளிலேயே தரையிறங்கிவிடுமாம் ஆர்க்னி தீவுக்கூட்டங்களின் விமான நிலையங்களை சுற்றி வந்து இணைக்கும் இந்த விமான சேவையை ஆசிரியர்கள், மாணவர்கள், காவலர்கள், மருத்துவர்கள் போன்றோரே அதிகமாக பயன்படுத்துகிறார்களாம்.
சுமார் 2.7 கி.மீ. (1.7 மைல்) தூரமேயுள்ள இந்த விமான பயணம் 2 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் மேலும் பலமான காற்றடித்தால் 47 நொடிகளிலேயே தரையிறங்கிவிடுமாம்.
இந்த விமானத் தடம் உலகின் மிகக் குறுகிய தடம் என கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது .
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.