3/10/16

அரபு நாட்டில் வேலை பார்க்கும் ஆண்கள் தங்கள் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பலவேறு சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
விடுமுறை நாட்களில் என்னதான் சொந்த ஊருக்கு வந்தாலும், அவர்கள் மனதில் இருக்கும் வலிகளுக்கு மருந்திருக்காது.

இதோ அரபு நாட்டில் அவர்கள் சந்திக்கும் உண்மை நிலைகள்.
 1. குடிக்கிற தண்ணீரை விட பெட்ரோலின் விலை குறைவு.
 2. பல வாரங்களுக்குள் பெரிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும்.
 3. படிப்பு இல்லாதவர்களுக்கு, படித்தவர்களை விட அதிக சம்பளம்.
 4. கம்பனிகளுக்கு, வேலையாட்களை பிடிக்கா விட்டால் எந்த காரணமும் இல்லாமல் வேலையை விட்டு தூக்கலாம்.
 5. சிபாரிசு இருந்தால் எந்த ஒரு அடி முட்டாளுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும்.
 6. அரபிகளின் மனசும், அரபு தேசத்தின் சீதோஷ்ண நிலையும் நமக்கு புரியாது. எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.
 7. பாலைவனமாக இருந்தாலும், எல்லா இடமும் பச்சைபசேலென இருக்கும்.
 8. அரபு நாட்டில் நீங்கள் பணம் சம்பாதிக்கா விட்டால், உலகில் எந்த ஒரு மூலையிலும் நீங்கள் பணம் சம்பாதிக்க மாட்டீர்கள்.
 9. நேரம் சீக்கிரமாக போகும்,ஒரு வெள்ளிகிழமையிலிருந்து அடுத்த வெள்ளிக்கிழமைக்கு உள்ள தூரம் ரொம்ப குறைவாக நமக்கு தோன்றும்.
 10. திருமணம் செய்துகொள்ளாத வாலிபனின் கனவு, சொந்த மண்ணில் போகும் விடுமுறையும், அவன் திருமணமும் தான். திருமணம் ஆனவர்களின் கனவு Family விசாவும், அதன் பிறகு வரும் செலவுகளும்.
 11. நமது வீட்டுக்கு தேவையான பொருட்களை கடைவியாபாரிகள் அவர்களுடைய வாகனத்திலேயே நாம் இருக்கும் இடத்தில் கொண்டு தருவார்கள்.
 12. ஒவ்வொரு 5 கிலோமீற்றர் தூரத்திற்கும் ஷாப்பிங் மால் இருக்கும்.
 13. மனைவியோடு நேரில்பேசியதைவிட டெலிபோனில் பேசியதுதான் அதிகம்.
 14. ருசிக்காக உண்ணவில்லை பசிக்காக - உண்ணுகிறோம்.
 15. நினைவு வந்தால் -உறக்கம் இல்லை . அசதி வந்து உறங்குகிறோம் .
 16. வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை .
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.