சென்னை: புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இன்னும் சில மாதங்களில் புழக்கத்திற்கு விடப்படும் என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் இன்று அறிவித்தார்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதையடுத்து புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2000 ரூபாய் நோட்டுக்கள், அறிமுகம் செய்யப்பட்டு இன்று முதல் வங்கிகள் வாயிலாகவும், நாளை முதல் ஏடிஎம்கள் மூலமாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன.
இந்த நிலையில், மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்தார்.
புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அளவிலும், வண்ணத்திலும் வேறுபட்டிருக்கும் என்றும், இன்னும் சில மாதங்களில் அந்த ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நோட்டுக்கள் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் கொண்டவையாக இருக்கும் என தெரிகிறது. இதன் மூலம், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஒழிந்துவிட்டன என்று மக்கள் கவலைப்பட தேவையில்லை.
புதிய வடிவில் சில மாதங்களில் உங்கள் கரங்களில் அவை தவழ உள்ளன. அதேநேரம், இந்தியாவில் புதிதாக ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே அறிமுகமாகியுள்ளன. மற்ற அனைத்து கரென்சிகளும் இனிமேலும் தொடர உள்ளது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.