7/11/16

தலாக் பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பூ சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இதுகுறித்து சமுத்திரகனி நடிக்கும் ஆண்தேவதை பட தயாரிப்பாளர் பக்ருதீன் தனது முகநூலில் கூறியுள்ளதாவது, ” முஸ்லிம்களில் சிலர் இருக்கின்றனர்

இஸ்லாத்தைப் பற்றியோ அல்லது தாங்கள் சார்ந்த இயக்கங்களை பற்றியோ ஏதேனும் முரணான கருத்துக்களை யாரேனும் கூறினாலோ அல்லது மாற்றமாக நடந்து கொண்டாலோ உடனே அவர்களை பற்றி சகட்டுமேனிக்கு தனிபட்ட கருத்துக்களை கூறக்கூடியவர்களாக எழுதக்கூடியவர்களாக இருக்கின்றனர். 

அவ்வாறு எதிராக விமர்சிக்கக் கூடியவர்கள் முரணாண கருத்துக் கூறியவருக்கு சரியான கருத்தை தெரிவித்தார்களா என்றால் அதுவும் கிடையாது. இது எத்தகைய போக்கு என்று தெரியவில்லை.  

இத்தகைய விமர்சனத்திற்கு தற்போது நடிகை குஷ்பூ அவர்களும் ஆட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். யாரேனும் அவரை சந்தித்தோ அல்லது தொடர்பு கொண்டோ அவர் கூறிய கருத்துக்கு மாற்றமான உண்மையான கருத்தை தெரிவித்தார்களா என்றால் எனக்கு தெரிந்து அதுவும் நடக்கவில்லை.  

இத்தகைய போக்கு தவறானதாகும் என்பதை சம்பந்தபட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே நேரடியாக சந்தித்து விளக்கமளிக்க முயற்சி செய்யுங்கள் அல்லது உண்மையான கருத்தை மறுப்பாக பதிவு செய்யுங்கள். வீண் தர்க்கங்களும் தனிபட்ட விமர்சனங்களையும் தவிர்க்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.