10/9/16

ra6
ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள நோரில்ஸ்க் பகுதியில் செல்லும் டால்டிகான் ஆறு திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் மாறியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுற்று சூழல் துறை அதிகாரிகள் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ரஷ்யாவின் முக்கிய தொழில்மயமான மாசுபட்ட நகரங்களில் ஒன்று நோரில்ஸ்க் நகரம். இந்த நகரத்தை கடந்து செல்லும் டால்டிகான் ஆறு திடீரென ரத்த சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

இது தொடர்பாக, ரஷ்ய சுற்றுச்சூழல் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.ஆற்றின் நிற மாற்றத்திற்கான அறிவியல் பூர்வமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இருப்பினும் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் ஆற்று நீரில் கலப்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், தொழிற்சாலை குழாயில் உடைப்பு ஏதேனும் ஏற்பட்டிருப்பின் அதன் காரணமாக இத்தகைய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என ரஷ்ய சுற்றுச்சூழல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கண்முன்னே ஆறு நீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சியை பார்த்த மக்கள் திடீரென நிறம் மாறியிருப்பது கண்டு அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.