
கிங்டம் ஆஃப் சவுதி அரேபியா (Kingdom of Saudi Arabia) என இன்று அனைவராலும் அழைக்கப்படும் நாட்டின் முந்தைய பெயர் இன்றைய சவுதியின் இரு பெரும் மாகாணங்களை குறிக்கும் வகையில் 'கிங்டம் ஆஃப் ஹிஜாஸ் அன்ட் நஜ்து' (Kingdom of Hijas and Najd) என 1931 ஆம் ஆண்டு வரை அழைக்கப்பட்டது.
1902 முதல் 1927 வரை நடைபெற்ற பல போர்களின் விளைவாக ஹிஜாஸ், நஜ்து எனும் இரு பெரும் நிலப்பரப்பையும் பல குறுமன்னர்கள் ஆண்ட பகுதிகளையும் ஒன்றிணைத்து தனது நிலையான ஆட்சியின் கீழ் கொண்டு வந்த சவுதி அரேபியாவின் தந்தை என அழைக்கப்படும் மன்னர் அப்துல் அஜீஸ் அல் சவூது அவர்களுடைய ஆட்சி காலத்தில், அவருடைய உத்தரவின் பேரில் சவுதி அரசாங்க பத்திரிக்கையான 'உம்மல் குரா'வில் (Um Al Qura) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு சவுதி அரேபியா எனும் புதிய பெயர் மாற்றம் நிகழ்ந்தது.
அதாவது, ஹிஜ்ரி 1351 ஆம் வருடம் ஜமாத்துல் அவ்வல் பிறை 21 அன்று முதல் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது அதாவது 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி முதல், அதன்படி நேற்று முன் (23.09.2016 வெள்ளிக்கிழமை) சவுதி அரேபியா தனது 86 வது தேசிய தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளது.
படங்கள் குறித்த விளக்கம்:
1. அன்றைய ஜித்தா கவர்னர் ஷேக் அப்துல்லா அலி ரெதா அவர்களுடன் மன்னர் அப்துல் அஜீஸ் அல் சவூது அவர்கள்.
2. இரு பெரும் மாகாணங்களாக திகழ்ந்த ஹிஜாஸ் மற்றும் நஜ்தை குறிக்கும் வரைபடம்.

0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.