11/8/16

ஜேர்மனி நாட்டில் பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய நிரந்தர தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

ஜேர்மனியில் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, ஆளும் கட்சியான கிறித்துவ ஜனநாயக கட்சி இன்று நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்கிறது.

‘பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் முழு உடலையும் மறைக்கும் புர்கா அணிய தடை விதிக்க’ இந்த மசோதா வலிறுத்தும்.

இது மட்டுமின்றி தற்போதுள்ள பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொது பேருந்துகள் நிலையங்களில் வீடியோ கமெராக்களை பொருத்தவும் இந்த சட்ட மசோதா வழிவகை செய்யும்.

இன்று நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அந்நாட்டு உள்துறை அமைச்சரான Thomas de Maiziere தாக்கல் செய்கிறார்.

இந்த மசோதாவை அனைத்துக்கட்சிகளும் ஏற்றுக்கொண்டால், அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு பின்னர் இச்சட்டம் நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்படும்.

பிரான்ஸ் நாட்டில் இச்சட்டம் கடந்த 2010ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது ஜேர்மனியும் இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

2 comments:

  1. syed saleem13 ஆகஸ்ட், 2016

    Good

    பதிலளிநீக்கு
  2. syed saleem13 ஆகஸ்ட், 2016

    Good

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>