.

.
28/4/16

ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக் கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,
உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை என்று சொன்னார்.

அந்த சிறுவன் இந்த பணம் போதாதா என்று வினவினான்.
அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம் குறைவாக உள்ளது என்றார்.

அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.
நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மை யாருக்கு தர போகிறாய் என்று கேட்டேன்.

அதற்கு அந்த சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான்.
மேலும் அவன் பேச தொடர்ந்தபோது என் இதயம் நின்று விட்டது போல் உணர்தேன். அவன் கூறியது “இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என்
தங்கை கடவுளிடம் சென்று விட்டாள். என் அம்மாவும் கடவுளிடம் செல்ல
இருக்கிறார்.

நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா
கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டு வந்தேன். எனக்கு என் தங்கையும் அம்மாவும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டேன், ஆனால் அம்மா கடவுளிடம்
செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினார்.

மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான் அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும் கூறினான்.

நான் என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன் வைத்திருந்த பணத்துடன் சேர்த்து, மீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன். அவனும் இசைந்தான், நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல் இருந்தது அவன் கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில் படித்தது என் நினைவிற்கு வந்தது,
காரில்  பயணம் செய்த அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த சரக்கு வண்டி(truck) மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் ஓட்டுனர்
குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும் வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் என்றும் அவர் மூலை சாவு  (coma) நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள்கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண்இறந்து விட்டாள் என்று. நான்அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்அச் சிறுவனின் அம்மா சடலமாககிடந்தாள் , கையில் சிறுவனின் புகைப்படமும் அந்த பொம்மையும் இருந்தது. அங்கிருத்து கனத்த இதயத்துடன் திரும்பினேன் அந்த சிறுவனின் தன் அம்மாவிடமும் தங்கையிடம் வைத்திருந்த அன்பும் பாசமும் அப்படியே உள்ளது. ஆனால் ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம் ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது
தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள்
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>