.

.
15/4/16

வாடஸ்அப்பில்…வலம் வந்த நெஞ்சை சுட்ட பதிவு…..

திருச்சிக்கு என் மகனை ஒரு கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்றிருந்தேன்,..அங்கு நல்ல உடையணிந்து , நகையணிந்து காரில்
கணவன் மனைவி மற்றும் மகனுடன் வந்து இறங்கினார்கள்,.

அரசு வேலையில் இருவரும் இருக்கிறார்களாம், அவர்கள் அமர்ந்தார்கள்,,
அவர்களுக்கு அருகில் வயதான தம்பதிகள் சாதாரன உடையில் காலில் செருப்பு கூட இல்லாமல், தாய் தந்தையை இழந்த தனது பேரனுடன் அமர்ந்திருந்தனர்..

அலுவலக சிப்பந்தி ஒவ்வொருவராக அழைத்தார்,,பிரகாஷ்,,785. மார்க், என்றார், காரில் வந்தவர்கள் எழுந்து முதல்வர் அருகில் சென்றனர் . அவர் கோப்புகளை பார்த்துவிட்டு நீங்கள் SC,,கோட்டாவில் வருகிறீர்கள் எனவே தங்கும் விடுதிக்கும் சேர்த்து -2500-ரூபாய் கட்டி சேர்ந்து விடுங்கள் என்றார்,
கட்டிவிட்டார்கள், அவர்கள் கிளம்பும்போது
முதல்வர் உங்களுக்கு- 14000-ரூபாய்  உதவித்தொகை கிடைக்கும் வாங்கிக்கொள்ளுங்கள், என்றார் அவர்கள் சரி என்று கூறி சென்று விட்டனர்.

அடுத்து பிரவீன்-960-மார்க் என்று அழைத்தார்கள். அப்போது அந்த வயதான தம்பதிகள் தங்கள் பேரனுடன் முதல்வர் அருகில் சென்றனர். அப்போது முதல்வர் பெரியவரே நீங்கள் BC,-எனவே விடுதிக்கும் சேர்த்து -98000- ரூபாய் கட்டிவிடுங்கள் என்று கூறினார்..

உடன் அவர் தன் இடுப்பிலிருந்த பணத்தை எடுத்து, என்னிப்பார்க்க கூட முடியாமல் நடுங்கும் கைகளால் அலுவலக உதவியாளரிடம் கொடுக்க, அவர் அதை எண்ணிப்பார்த்து விட்டு ஆயிரம் ரூபாய் குறைகிறது என்று சொல்ல, பெரியவர் மனைவியை பார்க்க அந்த வயதான பெண்மனி தனது சுருக்கு பையிலிருந்து நடுங்கும் விரல்களால் சில்லரை நோட்டுகளை எண்ணிக் கொடுக்க.

பையனை சேர்த்துவிட்டு அந்த தம்பதிகள் வெளியில் செல்லும்போது, அந்த பெரியவர் தன் மனைவியின் தோளை தொட்டு ,பாக்கியம் பஸ்ஸுக்கு பணமிருக்கா என்று கேட்டார்.

இதை பார்த்தவுடன், ஆயிரம் சிறை கம்பிகளையும், பிரச்சினைகளையும் பார்த்து கலங்காத கண்களில் கண்ணீர் வழிந்தோடியது,,

இதற்காகத்தான் ஜாதிக்கொரு நீதியா? என்று 1999-லிருந்து போராடுகிறேன்.

மக்கள் அரிசிக்கும், மடிக்கணிணிக்கும், கிரைண்டருக்கும் பணத்திற்க்கும் விலை போனால் என்ன செய்வது?
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>