.

.
29/4/16

சிலர், நிறையச் சம்பாதித்தாலும், ‘கையில் எதுவுமே இல்லை’ என்பார்கள். சிலரோ, குறைவான வருவாய் பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட காலத்தில் ஓரளவு வசதியான நிலையை எட்டியிருப்பார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? சிலருக்கு பணத்தைச் சேமிப்பது, செலவுகளைக் குறைப்பது இயல்பான பழக்கம் ஆகியிருக்கிறது.

சிலருக்கு அக்கலை கைவருவதில்லை. சேமிப்பின் தாரக மந்திரமே சிக்கனம் தான். நீங்கள் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறு தொகையை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும்.

முதலில் நீங்கள் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கவனித்து, தவிர்க்க வேண்டியதை தவிருங்கள். பிறகு தானாக செல்வம் பெருகத் தொடங்கும். பணத்தைச் சேமிப்பதற்கான 10 வழிகள் இதோ…

1. செல்போன் அழைப்புகளை அவசியமான நேரத்தில் மட்டும் பேசுங்கள். கண்டிப்பாக குறிப்பிட்ட தொகை மிஞ்சும்.

2. பணிபுரிபவர்கள் அன்றாடம் தவறாமல் பானங்களுக்குச் செலவு செய்கிறார்கள். ஒருநாளில் பலமுறை காபி குடிப்பவராக இருந்தால் பிளாஸ்க்கில் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்.

3. சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தைச் சேமிப்பது நல்ல வழி. வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் சிறு தொகையை சேமிப்புக் கணக்கில் போடலாம். அது ‘சிறு துளி பெருவெள்ளம்’ எனும் பொன்மொழிக்கேற்ப பெருகி வளரும்.

4. பணம் வீணாகும் வழியை செலவுக் கணக்கு மூலம் தெளிவாகக் கண்டுபிடிக்கலாம். சேமிக்க முடியாமல் போனதற்கான காரணத்தையும் கண்டறிந்து விடலாம். பின்னாளில் நீங்கள் மனநிம்மதியுடன் வாழ, இப்போதே நீங்கள் வீட்டுச் செலவை எழுத வேண்டும். நேற்று வரை இந்த பழக்கம்
இல்லாதிருந்தால், இன்றிலிருந்தாவது வரவு- செலவைக் குறிக்கப் பழகுங்கள்.

5. வீட்டு மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி விடுவதும் பணத்தைச் சேமிக்கும் சிறந்த வழியே.

6. அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது, உங்கள் பணத்தைக் காலியாக்கி விடும். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது பணத்தைச் சேமிக்கும் சிறந்த சக்தியாகும். இதனால் உடல்நலமும் பாதுகாக்கப்படும்.

7. திடீர் பணத்தேவைகளுக்குக் கடன் வாங்காமல் இருக்க, அதற்கென ஒரு சிறுதொகையை தனியாக மாதந்தோறும் சேமித்து வருவது நல்ல விஷயம்.

8. வியாபாரத் தள்ளுபடி, சலுகை அறிவிப்புகளில் மயங்கி தேவையற்றதை வாங்கிச் சேர்க்காதீர்கள். அவையெல்லாம் வியாபாரத் தந்திரம் என்று உணருங்கள்.

9. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை ‘செகண்ட் ஹாண்டாக’ வாங்குவது பணத்தை சேமிக்க ஒரு வழி. ஒரு பொருள் சிறந்ததா என்பதை அறிய ‘செகண்ட் ஹாண்ட்’ பொருட்கள்தான் சரி.

10. வீட்டில் தேவைக்கேற்ப மின் சாதனங்களைப் பயன்படுத்துவதும், அதற்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்துவதும் மின் கட்டணத்தில் ‘வெட்டு’ விழ வைக்கும்.

வாழ்வில் சிலவற்றை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும், சிலவற்றை குறைவாக பயன்படுத்த வேண்டும், இன்னும் சிலவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த மூன்றையும் சரியாகச் செய்தாலே செலவுகள் பெருமளவு குறைந்து விடும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>