"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
6/3/16

2016–ல் உலகின் சிறந்த ஓட்டல்கள் குறித்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது, ராஜஸ்தானில் உள்ள ‘உமைத் பவன் பேலஸ்’. இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் இது. ‘பேலஸ்’ என்ற பெயரை தம்முடன் சேர்த்துக்கொண்ட பல ஓட்டல்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஆனால் நிஜமான அரண்மனை அனுபவத்தைப் பெற வேண்டும் என்றால் உமைத் பவன் பேலசுக்குத்தான் செல்ல வேண்டும்.

வாருங்கள், அந்த ஓட்டலை சுற்றிப்பார்த்துவிட்டு வரலாம்!
வறட்சி காலத்தில் தனது மக்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காக மகாராஜா உமைத் சிங்கால் கட்டப்பட்டது, 26 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இந்த அரண்மனை வளாகம்.

உமைத் சிங்கின் கொள்ளுப் பேரன் இரண்டாம் கஜ் சிங், தற்போது இந்த அரண்மனையின் உரிமையாளராக இருக் கிறார். இந்த அரண்மனை ஓட்டலை தாஜ் குழுமம் நிர்வகித்து வருகிறது.

உலகின் பெரும் பணக்காரர்கள், வி.ஐ.பி.க்கள் விரும்பும் ஓட்டலாக இது உள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், பாப் பாடகி மடோன்னா, பில் கேட்ஸ் ஆகியோர் இங்கு தங்கிய உலகப் பிரபலங் களில் சிலர்.
ஜோத்பூர் நகரம் அருகே, ராஜஸ்தானின் வறண்ட நிலப்பரப்பில், ஒரு வைரம் போல மின்னுகிறது, உமைத் பவன் பேலஸ்.

‘‘கடந்த காலத்தின் ஆடம்பரம்’ என்பதுதான் எங்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. இங்குள்ள சூழல், அமைப்புகள், பொருட்கள் எல்லாமே 1940–ம் ஆண்டு பாணியை நினைவுபடுத்துவதாக இருக்கும். தற்போது பல நவீன ஓட்டல்கள் இருக்கின்றன. ஆனால் இது அவைகளில் இருந்து மாறுபட்டது. பழமை, பாரம்பரியம், கவர்ச்சிமிக்கது’’ என்கிறார், உமைத் பவன் பொது மேலாளர், வின்சென்ட் ரமோஸ்.

ஓட்டலுக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் ஒரு மகாராஜா போல, மகாராணி போல உணர வைக்க வேண்டும் என்பது இந்த ஓட்டல் நிர்வாகத்தின் இலக்கு. ஓட்டலின் உயர்ந்த கேட் வழியே உள்ளே நுழையும் விருந்தினர்கள் மேளதாளம் முழங்க வரவேற்கப்படுவார்கள். அகன்று விரிந்த படிக்கட்டுகளில் ரோஜா மலர் தூவப்பட்டிருக்கும்.

ஓட்டலில் தங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி சமையல்காரர் நியமிக்கப்பட்டுவிடுவார். தங்குவோர் எப்போது, என்ன கேட்டாலும் கிடைக்கும். ‘நள்ளிரவில் தோசை கேட்டாலும் உடனே சுடச்சுட சுட்டுத் தருவோம்’ என்கிறார்கள். உணவு விஷயத்தில் சொதப்பினால்  மன்னிப்பே கிடையாதாம்.
 
‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை உணவு பிடிக்கும். அதற்கேற்ப தயாரித்துத் தருவதுதான் எங்கள் வேலை. இங்குள்ள 64 அறைகளில் தங்குபவர்களும் 64 விதமாக உணவுகள் கேட்பார்கள். 

அதற்கேற்ப தயாரித்துக் கொடுப்போம். எங்களைப் பொறுத்தவரை இங்கு வரும் ஒவ்வொருவருமே ராஜா, ராணிதான்’ என்கிறார், தலைமை சமையல்கலைஞர் சுஜோய் குப்தா.

எது கேட்டாலும் கிடைப்பதாலே என்னவோ, இந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வினோத கோரிக்கைகளை  விடுப்பதுண்டாம். ஒருவர், இரவில் எங்காவது ஒரு கண்காணாத இடத்தில் சாப்பிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். 

அவரையும் அவரது மனைவியையும்    ஆளரவமற்ற இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே சுடச்சுட இரவு உணவு தயாரித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
அங்கே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தார்களாம்.

இன்னொருவர், ஒரு யானையில் வண்ணம் தீட்டி மகிழ விரும்பியிருக்கிறார். மற்றொரு தொழிலதிபர், தனது மனம் கவர்ந்த பெண்ணை வரவழைத்து காதலைச் சொல்ல 2 ஆயிரம் ரோஜாக்கள் வேண்டும் என்று கூறியிருக்கிறார். எல்லாவற்றையும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

சுற்றிலும் காய்ந்து கிடக்கும் பகுதியில், இந்த உமைத் பவன் வளாகம் மட்டும் பச்சைப் பசேலென்று கண்ணைக் கவர்கிறது. மெத்து மெத்தென்று பஞ்சு போலிருக்கும் புற்களை கென்யாவில் இருந்து வரவழைத்து நட்டிருக் கிறார்கள்.

இங்கே எந்த அறையிலும் இருக்கைகள், ஓவியங்கள் என்று எந்தப் பொருளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நவீன வசதி என்ற பெயரில் எந்த மாடர்ன் பொருட்களையும் கொண்டுவந்துவிடுவதில்லை. மகாராஜாக்கள் காலம் அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலிக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

உமைத் பவனில் உள்ள ‘சிறிய அறை’யே மற்ற நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பெரிய அறையையும் விடப் பெரிதாக இருக்கிறது. அதிலும் இங்குள்ள ‘மகாராஜா, மகாராணி சூட்’கள் ரொ…ம்பப் பெரியவை. குறிப்பாக ‘மகாராணி சூட்’ ஆகப் பெரிது. பணம் கொடுத்தாலும் எல்லோரும் இங்கு தங்கிவிட முடியாது. அந்தப் பாக்கியம் பெற்ற சில பிரபலங்கள்… மடோன்னா, அமிதாப் பச்சன்.

உமைத் பவன் பணியாளர்களுக்கு, விருந்தினர்களை அருமையாக கவனித்துக்கொள்ள வேண்டும், அதேநேரம் எப்போதும் அவர்கள் அருகிலேயே நின்று மூக்கை நீட்டிக்கொண்டிருக்கக் கூடாது என்கிற விதத்தில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

‘சமீபத்தில் இங்கு வந்து தங்கிய குவைத் அரச குடும்பத்தினர், அருகில் ஆட்கள் இருப்பதை விரும்பவில்லை. நான் அதற்கேற்ப சர்வீஸ் செய்தேன்’ என்கிறார், பணியாளர் அல்கா. இவரது சேவை பிடித்துப் போனதால் அவர்கள் இவரை வெளியே ஷாப்பிங்குக்கும் உடன் அழைத்துச் சென்று வந்தார்களாம்.

நம் நாட்டின் பல பகுதிகளில், அரண்மனைகள் ஓட்டல்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அங்கெல்லாம், அரச குடும்பத்தினர் தங்கிய இடத்தில்தான் நாம் தங்க முடியும். 

ஆனால், உமைத் பவனிலோ அரச குடும்பத்தினருக்கு அருகிலேயே தங்க முடிகிறது. ஆம், இந்த ஓட்டலின் ஒரு பகுதியிலேயே, மன்னர் இரண்டாம் கஜ் சிங்கின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆனால் அவர்களைப் பார்ப்பது அபூர்வம்தான். அமிதாப் பச்சன் இங்கு தங்கியபோது அரச குடும்பத்தினரைச் சந்திக்க விருப்பம் தெரிவிக்க, நாகரிகமாக மறுப்புத் தெரிவித்துவிட்டார்களாம்.

அதேபோல, இந்த ஓட்டலில் உள்ள எந்த ஒரு பொருளும், எவ்வளவு விலைக்குக் கேட்டாலும் கிடைக்காது. உலக கோடீசுவரர்களில் ஒருவரான லட்சுமி மிட்டல், அப்படி ஒரு பொருளுக்கு அசாதாரண விலை கொடுக்க முன்வர, மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘இது எங்கள் வீடல்லவா?’ என்கிறார் கஜ் சிங்.

சரி, நீங்கள் இவ்வளவு சொல்லும் ஓட்டலில் ஒருநாள் தங்கிப் பார்க்கலாமே என்கிறீர்களா? தாராளமாக. உமைத் பவனில் உள்ள ‘சிறிய’ அறையின் ஒரு நாள் வாடகை  ரூ. 60 ஆயிரம்தான்...........

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.