"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
6/3/16

பிரசவம் முடிந்த ஒரு மணிநேரத்திற்குள் பெண்களின் உடலில் பல மாற்றங்களும், விஷயங்களும் நிகழும்..

பிரசவத்தின் போது ஏற்கனவே உடல் 10-13 கிலோ எடையை இழக்கும்.

இருப்பினும் உடலில் இன்னும் உபரி நீரின் எடையை சுமக்க வேண்டியிருக்கும்.

இந்த உபரி நீரானது சிறுநீர் வாயிலாக குழந்தை பிறந்த 7 நாட்களில் வெளியேறிவிடும்.

மற்றொரு முக்கியமான ஒன்று இடுப்புப் பகுதியில் கடுமையான பிடிப்புக்களை உணரக்கூடும்.

குழந்தை பிறந்த பின் கர்ப்பப்பை பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பிக்கும்.

அதுவும் 2 பவுண்ட் முதல் 2 அவுன்ஸ் வரை இந்த சுருக்கம் இருக்கும். எனவே கட்டாயம் பிரசவத்திற்கு பின், முக்கியமாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது இடுப்புப்பகுதியில் கடுமையான பிடிப்புக்கள் ஏற்படும்.

ஆனால் ஒரு வாரத்திற்கு பின் இந்த பிடிப்புக்கள் மெதுவாக குறைந்துவிடும்.

சிசேரியன் அல்லது சுகப்பிரசவம் முடிந்த பின், பெண்களுக்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்படும்.

இத்துடன் சளி, எஞ்சிய இரத்தம் மற்றும் கருப்பை புறணியில் இருந்து திசுக்களும் வெளியேற்றப்படும்.

பெரும்பாலான பெண்களுக்கு பிரவசத்திற்கு பின் 3-10 நாட்கள் கடுமையான இரத்தப்போக்கு இருக்கும். இது சாதாரணம் தான் மற்றும் சில வாரங்களில் இது குறைந்துவிடும்.

பிரசவத்திற்கு பின் 24 மணிநேரத்தில் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதைக் காணலாம். இதற்கு திடீரென்று உடலில் மாற்றம் ஏற்பட்டிருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், தூக்கமின்மை போன்றவைகள் காரணமாக இருக்கும். இதனை குடும்பம் மற்றும் நண்பர்களின் உதவியுடன் சரிசெய்யலாம். மேலும் நல்ல ஓய்வு அவசியம்.

சுகப்பிரசவத்திற்கு பின், பிறப்புறுப்பின் வாய் பெரிதாகியிருப்பதோடு, அப்பகுதியில் தையல் போட்டிருப்பதால் கடுமையான வலியை உட்கார்ந்து எழும் போதொல்லாம் சந்திக்க நேரிடும். இதனை சரிசெய்ய ஐஸ் பேக் கொண்டு அப்பகுதிக்கு ஒத்தடம் கொடுக்கவும்.

சிசேரியன் செய்தவர்களுக்கு, அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், அவ்விடத்தில் உள்ள வெட்டுக்காயங்களால் வலியை சந்திக்கக்கூடும். இந்த வலியை மருத்துவர்கள் பரிந்துரைத்த வலி நிவாரணிகளை எடுப்பதன் மூலம் தடுக்கலாம்.

மற்றொரு முக்கியமான ஓர் நிகழ்வு, பிரசவத்திற்கு பின் 24 மணிநேரத்தில் மஞ்சள் நிறத்தில் சற்று கெட்டியான சீம்பால் உருவாகும். இப்பாலை பிரசவம் முடிந்த 2 மணநேரத்திற்குள் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

ஆரம்பத்தில் மார்பக காம்புகள் மிகவும் மென்மையாக இருப்பதால், குழந்தை பால் குடிக்கும் போது வலியை உணரக்கூடும். நாட்கள் செல்ல செல்ல அது சரியாகிவிடும்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.