.

.
13/3/16

 
தினமும் 5 முறை தொழுகை செய்வது என்பதை ஒன்றாக குறைக்க வேண்டிய காலம் என்றும் பொது இடங்களில் தொழ அனுமதிக்க கூடாது என்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கூறிஉள்ளார். 

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். 

கடந்த 20 வருடங்களில் அவர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடமாறி வாழ்ந்து தனது எழுத்துப் பணியை தொடர்கிறார். கடந்த வருடம் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் என்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்திகர் என்று தஸ்லிமா குறிப்பிட்டு இருந்தார். 
 
சில ஜெர்மனி பல்கலைக்கழகங்களில் வழிப்பாட்டு அறைகள் மூடப்பட்ட விவகாரங்களில் இஸ்லாமியர்கள் அதிருப்தியை வெளியிடுவதை சாடிஉள்ள தஸ்லிமா நஸ்ரின், ”ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் வழிப்பாட்டு அறைகளை மூடியது மிகவும் நல்ல முடிவாகும். இஸ்லாமியர்கள் கோபமாக உள்ளனர். 

அவர்கள் மட்டுமே வழிபாடு செய்யும் மக்கள். பள்ளிகள், அலுவலகங்கள், விமான நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என அனைத்து பொது இடங்களிலும் உள்ள வழிப்பாட்டு அறைகளை மூடவேண்டும், உங்களுக்கு விரும்பம் இருந்தால் உங்களுடைய வீட்டில் தொழுகை நடத்துங்கள்,” என்று கூறிஉள்ளார். 

டுவிட்டரில் தொடர்ச்சியாக தகவலை பதிவு செய்துஉள்ள தஸ்லிமா நஸ்ரின், ”மக்கள் ஒருநாளைக்கு 50 முறை தொழுகை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 

சிறகுடைய குதிரையில் நபி சொர்க்கம் சென்று கடவுளை சந்தித்தார், அப்போது 50 முறை தொழுகையை 5 ஆக குறைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டாரம். இப்போது 5 முறையை ஒன்றாக குறைக்க வேண்டிய காலம் ஆகும்.” என்று கூறிஉள்ளார். 

கடந்த வருடம் ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்து பேசிய தஸ்லிமாவிடம், இஸ்லாமியத்தின் மீதான உங்களது விமர்சனம் ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பட்டது. தஸ்லிமா பதில் அளிக்கையில் மதம் பெண்களை துன்புறுத்துகின்றது. 

சட்டங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது. கல்வி, திருமணம், குழந்தை வளர்ப்பு மற்றும் சொத்துரிமை ஆகியவற்றில் பெண்களுக்கு சம உரிமை தேவை. மதத்தின் பேரில் பெண்கள் மீது கல்லெறிவதை நிறுத்த வேண்டும் என்று நான் கூறுகிறேன். இது யாரை ஆத்திரமூட்டுகிறது.

நாகரீகமடையும் நாடுகள் அனைத்தும் மதத்தையும் நாட்டையும் பிரித்தே பார்க்கின்றது. மற்ற மதங்களுக்கு இருக்கும் இதே நிலை இஸ்லாமியத்துக்கு மட்டும் விதிவிலக்கானது அல்ல. மதசார்பற்ற மனிதாபிமானத்தை வலியுறுத்தும் எனது கருத்து ஆத்திரமூட்டுவதாக இருந்தாலும் அதில் தவறில்லை என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts