
சில உணவுகள் எளிதாக செரிமானமாகக் கூடியவை. சில உணவுகள் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இவற்றை ஒன்றாக ஒரே நேரத்தில் உண்பது செரிமான கோளாறை உண்டாக்கும். அதே போல உணவில் குளிர்ச்சியான, சூடான இருவேறு வகைகள் இருக்கின்றன. இவற்றை ஒன்றாக உட்கொள்ளுதல் உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்து கூடியதாக அமையும்.
எனவே, எந்தெந்த உணவருந்தும் போது, எந்தெந்த உணவை சேர்த்துக் கொள்ள கூடாது என இனிக் காண்போம்….
பால் உணவுகள் + பழங்கள்
பழங்கள் விரைவாக செரிமானம் ஆகிவிடும் ஆனால், பால் உணவுகள் செரிமானம் நேரம் எடுத்துக் கொள்ளும். இது ஒட்டுமொத செரிமான செயற்பாடுகளை நிதானமாக்கிவிடும். மேலும் இதனால் அசிடிட்டி பிரச்சனையும் உண்டாகலாம்.
பால் உணவுகள் + முள்ளங்கி
முள்ளங்கி சூடான உணவு, பால் உணவுகள் குளிர்ச்சியானவை. இவற்றை ஒன்றாக உண்பது நிச்சயம் செரிமான கோளாறை ஏற்படுத்தும்.
மீன் + பால்
மீன் மட்டுமின்றி எந்த ஒரு இறைச்சி உணவு உண்ணும் போதும் பால் அருந்துவது உடலுக்கு தீங்கானது. இந்த கலவை உடலில் நச்சுக்களை உண்டாகும். இதனால் உணவு ஒவ்வாமை (Food Poisoning) ஏற்படலாம்.
உப்பு + பால்
உப்பு பால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணான உணவுப் பொருட்கள், இதை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நெய் + தேன்
நெய் உடலுக்குள் குளிர்ச்சியையும், தேன் சூட்டையும் அதிகரிக்கும் உணவுப் பொருள். எனவே, இவை இரண்டை ஒன்றாக உட்கொள்ள வேண்டாம்.
பழங்கள் + மாவு உணவுகள்
பழங்கள் உண்ணும் போது உருளைக்கிழங்கு, சீஸ், வறுத்த உணவுகள் மற்றும் மாவு உணவுகளுடன் உட்கொள்ள வேண்டாம். முன்பு கூறியதை போல பழங்கள் உடனே செரிமானம் ஆகிவிடும், மற்றவை செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால், செரிமான கோளாறு தான் உண்டாகும்.
மெலன் உணவுகள் + தானியங்கள்
செரிமானத்தை கடினமாகும் மற்றொரு கலவை உணவுகள் இவை. மெலன் பழங்கள் உண்ணும் போது தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.
குளிர்பானங்கள்
உணவு உண்ட உடனே குளிச்சியான பானங்கள், பனிக்கூழ் போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம். இது செரிமான கோளாறு உண்டாக்கும்.
இனிப்பு உணவுகள்
மாலை ஆறு மணிக்கு மேல் இனிப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டாம். இது உடலில் அதிகப்படியான சளி உண்டாக காரணியாக இருக்கிறது.
தேன்
தேனை எப்போதும் சமைத்து சாப்பிடக் கூடாது. சமைக்கும் போது தேனில் உண்டாகும் ரசாயன மாற்றம் அதனை விஷமாக மாற்றிவிடும்.

0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.