"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
19/1/16

திருட்டு ரயில்.......தலைவரின் பதில்கள்......:-

1.திருவாரூரில் இருந்து திருட்டு ரெயில் ஏறி சென்னைக்கு வந்த கருணாநிதியின் குடும்பம்'' என்று ஜெயலலிதா
எழுதியிருக்கிறார் என்றால், அவருடைய தகுதியை பற்றி தமிழ்நாட்டு மக்கள் தான் எடை போட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். அவரது இந்த தரத்திலான வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றபோதிலும், திரும்பத் திரும்ப அவர் இந்தத் தொடரை பயன்படுத்தி வருவதால், இவர் எதை "மூலதனமாக'' வைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்?. எப்படி இன்று கொட நாட்டில் தங்கியிருக்கிறார்?. எங்கிருந்து வந்தது இந்தச் சொத்து என்றெல்லாம் திருப்பி கேள்வி எழுப்ப நமக்குத் தெரியாதா?. 
.........கலைஞர்.....

2. எதிரணியைச் சேர்ந்த நண்பர்கள், கருணாநிதி திருவாரூரிலிருந்து திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தவன் என்று சொல்லி எனக்கு புகழாரம் சூட்டுகிறார்கள்.

கருணாநிதி திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தார் என்று புகழாரம்சூட்டி வருகின்றனர். பதிலுக்கு பதில் சொல்ல நானும் சொல்ல முடியும்.

 அப்படி சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை. வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொன்னது போல என்னைப் பற்றி யார் எதைச் சொன்னாலும் அதைப்பற்றி கவலை இல்லை. என் இயக்கத்தை பற்றிச் சொன்னாலும், நான் என் வேலையை செய்து கொண்டே போவேன். என் ஆட்சியைப் பற்றி சொன்னாலும் கவலை இல்லை.

நபிகள் நயாகம் ஒவ்வொரு நாளும் தெருவில் செல்லும் போது ஒரு அம்மையார், ஒரு வீட்டில் மாடியில் இருந்து குப்பையை அவர் தலையில் கொட்டி விடுவார். அவரும் அதைப் பார்த்து தட்டிவிட்டு போய்விடுவாராம். ஒரு நாள் அந்த தெருவில் நபிகள் வரும்போது தினமும் குப்பை கொட்டும் அந்த அம்மையாரைக் காணவில்லை. பக்கத்துவீட்டு காரரிடம் நபிகள் கேட்டபோது அந்த அம்மையாருக்கு உடல் நலம் சரியில்லை. கடுமையான காய்ச்சல் அதனால் அவர் குப்பை கொட்டவில்லை என்று தெரிவித்தார். நபிகள் பதறிப்போய் அந்த அம்மையாரை போய் பார்த்தார். அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்துவிட்டு வந்தார். அந்த அம்மையாருக்கு வெட்கமாக போய்விட்டது. அதுவரை நபிகள் நாயகத்தை எதிர்த்தவர் அவரது வழியை ஏற்றார் என்பது வரலாறு.

 அது போல குப்பையை கொட்டக் கொட்ட, அந்த குப்பை வெளியில் வர வர கொட்டுவோர் கைகள்தான் அலுத்துப்போகும். நான் குப்பைகளை பற்றி கவலைப்படவில்லை. பொறுத்தார் பூமி ஆள்வார். ஓராண்டு அல்ல, ஈராண்டல்ல பல ஆண்டுகள் பொறுத்துக் கொண்டு நாம் பூமியை ஆண்டுகொண்டு இருக்கிறோம்.

3. திருவாரூரில் இருந்து கருணாநிதி குடும்பத்தோடு திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தார் என்று அம்மையார் ஜெயலலிதா கூறியிருக்கிறார். 

ஆனால், எந்த ஆண்டு, என்ன தேதி என்று அவர் குறிப்பிடவில்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சொல்கிறார். 

தஞ்சாவூரில் நடந்த மேடையில்தான் அண்ணா என்னை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அந்தக் கூட்டத்தில் அண்ணா பேசும்போது, திராவிட இயக்கத்தின் வரலாற்றின் ஒரு பகுதியை நான் எழுதிவிட்டேன். பிற்பகுதியை தம்பி கருணாநிதி எழுதுவான் என்றார்.

 அதனால் இந்த மேடையை நான் தொட்டு கும்பிட விரும்புகிறேன். அண்ணா எந்த நேரத்தில் அவர் அப்படி சொன்னாரோ தெரியவில்லை, அவர் சொன்னபடி அந்தப் பணியை உங்கள் துணையோடு, ஒத்துழைப்போடு, நீங்கள் எல்லோரும் பக்கபலமாக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

ஜெயலலிதா அம்மையார் என்னைப் பற்றி பேசியது பற்றி அமைச்சர் பொன்முடி, தம்பி மு.க.ஸ்டாலின் ஆகியோர் கவலைப்பட வேண்டாம்.

 ஒருமுறை நான் ரயில் ஏறி சென்றபோது போலீசாரால் தடுக்கப்பட்டது உண்மைதான். நான், சிதம்பரம் ஜெயராமனின் தங்கை பத்மாவதியை திருமணம் செய்து கொண்டிருந்தேன். 13-4-1944 அன்று அவர் முதலிரவுக்காக சிதம்பரத்தில் காத்திருந்தார்.

 நான் எனது நண்பர் தென்னனை அழைத்துக்கொண்டு ரயிலில் சிதம்பரம் சென்றேன். அன்று அம்மையார் ஜெயலலிதா சொன்னது போல எதுவும் நடக்கவில்லை. நாங்கள் இருவரும் சிதம்பரம் போய் இறங்கியதும், 5, 6 போலீசார் எங்களை வழிமறித்து நீங்கள் சிதம்பரம் ஊருக்குள் போகக்கூடாது என்று தடுத்தனர். காரணம் அன்றைய தினம் அங்கு பிராமணர்கள் மாநாடு நடந்தது. அங்கு போய் நாங்கள் கலவரம் செய்துவிடக் கூடாது என்பதற்காக தடுப்பதாக போலீசார் கூறினார்கள். எனவே எனக்கு 144 தடை உத்தரவு போட்டனர்.

அந்த மாநாடு, சாதியை வளர்க்கும் மாநாடு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோரை இழித்து, பழித்து பேசும் மாநாடு, தமிழனுக்கு அவமரியாதை செய்யும் மாநாடு என்று முரசொலியில் துண்டு அறிக்கையில் நான் எழுதியிருந்தேன்.

அதன் காரணமாகத்தான் சிதம்பரம் ஊருக்குள் போக விடமாட்டேன் என்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, நமக்கு எதுக்கு வம்பு என்று சொல்லி நண்பர் தென்னனை அழைத்துக்கொண்டு ரயில் ஏறி திருவாரூருக்கு சென்றுவிட்டேன். 

இதுதான் அன்று நடந்தது. இது எப்படி திருட்டு ரயில் போனது ஆகும்? நீங்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும். வாய் துடுக்கு உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.

 நான் அப்படி பேசமாட்டேன்........
.....கலைஞர்
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.