"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/11/15

சீரான இண்டர்நெட் பயன்படுத்த இன்று பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒன்றாக வைபை இருக்கின்றது.

வீட்டில் சிறப்பான வைபை பெற என்ன செய்ய வேண்டும் என்பனவற்றை தெரிந்து
கொள்ளுங்கள்…

வயர்லெஸ் இண்டர்நெட் வசதி பெற மிகவும் அவசியமான கருவி தான் ரவுட்டர், உங்களது பட்ஜெட்டில் பொருந்தும் மிகவும் தரமான ரவுட்டரை வாங்குவது
நல்லது.

பொதுவாக ரவுட்டரை உங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப வாங்க வேண்டும்.

இண்டர்நெட் கனெக்ஷன் எடுக்கும் போது
பிஎஸ்என்எல் போன்ற
தொலைதொடர்பு நிறுவனங்களை
தேர்ந்தெடுப்பவர்கள் ஏடிஎஸ்எல் (ADSL) ரவுட்டரை
வாங்கலாம், மாறாக கேபிள் ஆப்பரேட்டர்களிடம்
இருந்து இண்டர்நெட் கனெக்ஷன் பெருவோர் நான்-ஏடிஎஸ்எல் (non-ADSL) ரவுட்டரை
பயன்படுத்த வேண்டும். ஏடிஎஸ்எல் அல்லது நான்-
ஏடிஎஸ்எல் என எவ்வித கனெக்ஷனை
எடுத்தாலும் குறைந்தபட்சம் 2 எம்பிபிஎஸ் வேகத்தில்
அன்லிமிடெட் கனெக்ஷன் எடுக்கலாம்.

இதோடு யுஎஸ்பி போர்ட் வைத்த ரவுட்டர் வாங்குவது சில
நேரங்களில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
முடிந்தவரை அதிகப்படியான ஆன்டெனாக்களை
பயன்படுத்தலாம், கூடுதல் ஆன்டெனா ரவுட்டர் சிக்னல்களை சீராக வழங்க வழி செய்யும்.

அதிக வேகமான வை-பை வசதியை பெற ‘802.11ac’ ரவுட்டரை தேர்வு
செய்யலாம்.

இவ்வகை ரவுட்டரானது
சாதாரண ரவுட்டர்களை விட மூன்று மடங்கு வேகமான டேட்டாவினை வழங்கும்.

ஏசி ஸ்டான்டர்டு ரவுட்டர்கள் சீரான நெட்வர்க் வழங்குவதோடு பழைய ரவுட்டர்களிலும்
பொருந்தும். ரவுட்டரை வாங்கி வந்த பின்
அதை பொருத்துவது எப்படி என்பனவற்றை
முழுமையாக படித்து தெரிந்து கொண்டு
ரவுட்டரை வீட்டின் நடுவில் வைக்க வேண்டும்.

வீட்டில் அனைவரும் அதிகமாக இண்டர்நெட் பயன்படுத்தும் இடத்தில் ரவுட்டரை வைத்தால்
நெட்வர்க் வேகம் சீராக இருக்கும்.

ரவுட்டரை உயரமான இடத்தில் வைக்கும் போது சீரான சிக்னல்
மற்றும் வேகமான இண்டர்நெட் பெற முடியும் 
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.