"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
26/10/15

மனைவியை அடிக்கும் உரிமை
கணவனுக்கு உண்டா..?
ஆய்வு : மனைவியை அடிக்கும்
உரிமையை கணவனுக்கு அல்லாஹ்
தந்திருக்கிறான் என்பது சரியா..?
குர்ஆன் தர்ஜுமா செய்வோர்... பல
பொருள் தரும் ஒரு அரபி வார்த்தைக்கு
அதன் எல்லா பொருள்களையும் தீர
ஆய்வு செய்து, எது அந்த வசனத்துக்கு
சரியாக பொருந்தும் என்று பற்பல ஹதீஸ்
உட்பட பல விஷயங்களை தீர ஆலோசித்து
அவ்வார்த்தைக்கு சரியான பொருள்
சொல்ல வேண்டும். இல்லாவிட்டால்
மிகப்பெரிய திசை திருப்பல் ஏற்பட்டு,
அல்லாஹ் சொல்லாத ஒன்றை...
இஸ்லாமிய விரோத சட்டத்தை... குர்ஆன்
சொல்லும் அல்லாஹ்வின் சட்டமாக
உருவாகி விடக்கூடும்..! இதிலிருந்து
உம்மத்தை அல்லாஹ் காப்பாற்ற
வேண்டும்..!
அதற்கு இதோ ஓர் உதாரணம்..!
"கணவன் தனக்கு கட்டுப்படாத
மனைவியை அடிக்கலாம்" என்று குர்ஆன்
சட்டம் சொல்வதாக மொழிபெயர்த்து
சொல்வோர் உலகில்
பெரும்பான்மையோர். ஆனால்... ஆழமாக
மொழி ஆய்வு செய்து, "குர்ஆன் & சஹீ
ஹதீஸ் ஒளியில்" தீர ஆலோசித்தால்...
அல்லாஹ் ஒருபோதும்... கணவனுக்கு
மனைவியை "அடிக்கும் உரிமை"யை
தரவில்லை என்பதை நாம் விளங்கலாம்..!
அப்படி தருவதாக சொல்லப்படும் ஆயத்து
இதுதான்..!
4:34 ﺍﻟﺮِّﺟَﺎﻝُ ﻗَﻮَّﺍﻣُﻮﻥَ ﻋَﻠَﻰ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ ﺑِﻤَﺎ ﻓَﻀَّﻞَ ﺍﻟﻠَّﻪُ ﺑَﻌْﻀَﻬُﻢْ
ﻋَﻠَﻰٰ ﺑَﻌْﺾٍ ﻭَﺑِﻤَﺎ ﺃَﻧﻔَﻘُﻮﺍ ﻣِﻦْ ﺃَﻣْﻮَﺍﻟِﻬِﻢْ ۚ ﻓَﺎﻟﺼَّﺎﻟِﺤَﺎﺕُ ﻗَﺎﻧِﺘَﺎﺕٌ
ﺣَﺎﻓِﻈَﺎﺕٌ ﻟِّﻠْﻐَﻴْﺐِ ﺑِﻤَﺎ ﺣَﻔِﻆَ ﺍﻟﻠَّﻪُ ۚ ﻭَﺍﻟﻠَّﺎﺗِﻲ ﺗَﺨَﺎﻓُﻮﻥَ
ﻧُﺸُﻮﺯَﻫُﻦَّ ﻓَﻌِﻈُﻮﻫُﻦَّ ﻭَﺍﻫْﺠُﺮُﻭﻫُﻦَّ ﻓِﻲ ﺍﻟْﻤَﻀَﺎﺟِﻊِ ///
ﻭَﺍﺿْﺮِﺑُﻮﻫُﻦَّ /ۖ // ﻓَﺈِﻥْ ﺃَﻃَﻌْﻨَﻜُﻢْ ﻓَﻠَﺎ ﺗَﺒْﻐُﻮﺍ ﻋَﻠَﻴْﻬِﻦَّ ﺳَﺒِﻴﻠًﺎ ۗ ﺇِﻥَّ
ﺍﻟﻠَّﻪَ ﻛَﺎﻥَ ﻋَﻠِﻴًّﺎ ﻛَﺒِﻴﺮًﺍ
4:34. (ஆண், பெண் இருபாலாரில்)
அல்லாஹ் சிலரை சிலரைவிட
மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்.
(ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து
(பெண் பாலாருக்காகச்) செலவு செய்து
வருவதினாலும், ஆண்கள் பெண்களை
நிர்வகிக்க வேண்டியவர்களாக
இருக்கின்றனர். எனவே
நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள்
கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும்,
பணிந்தும் நடப்பார்கள். (தங்கள்
கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில்,
பாதுகாக்கப்பட வேண்டியவற்றை,
அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு,
பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப்
பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம்
கணவருக்கு) மாறு செய்வார்களென்று
நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு
நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும்
திருந்தாவிட்டால்) அவர்களைப்
படுக்கையிலிருந்து
விலக்கிவிடுங்கள்; (அதிலும்
திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக)
அடியுங்கள். (?????????) அவர்கள்
உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால்,
அவர்களுக்கு எதிராக எந்த வழியையும்
தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக
உயர்ந்தவனாகவும், வல்லமை
உடையவனாகவும் இருக்கின்றான்.
4:35 ﻭَﺇِﻥْ ﺧِﻔْﺘُﻢْ ﺷِﻘَﺎﻕَ ﺑَﻴْﻨِﻬِﻤَﺎ ﻓَﺎﺑْﻌَﺜُﻮﺍ ﺣَﻜَﻤًﺎ ﻣِّﻦْ ﺃَﻫْﻠِﻪِ
ﻭَﺣَﻜَﻤًﺎ ﻣِّﻦْ ﺃَﻫْﻠِﻬَﺎ ﺇِﻥ ﻳُﺮِﻳﺪَﺍ ﺇِﺻْﻠَﺎﺣًﺎ ﻳُﻮَﻓِّﻖِ ﺍﻟﻠَّﻪُ ﺑَﻴْﻨَﻬُﻤَﺎ ۗ ﺇِﻥَّ
ﺍﻟﻠَّﻪَ ﻛَﺎﻥَ ﻋَﻠِﻴﻤًﺎ ﺧَﺒِﻴﺮًﺍ
4:35. (கணவன்-மனைவி ஆகிய)
அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி)
பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள்
அஞ்சினால் கணவனின்
உறவினர்களிலிருந்து ஒருவரையும்
மனைவியின் உறவினர்களிலிருந்து
ஒருவரையும் மத்தியஸ்தர்களாக
ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும்
சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ்
அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும்
படி செய்துவிடுவான் - நிச்சயமாக
அல்லாஹ் நன்கு அறிபவனாகவும்,
நன்குணர்கிறவனாகவும்
இருக்கின்றான்./////////////////
இந்த இரண்டு ஆயத்தில் இருந்து...
கணவன்... தனக்குக் கட்டுப்படாத
மனைவிக்கு,
1) நல்லுபதேசம் செய்தல்
2) படுக்கையில் இருந்து விலகிவிடல்
3) இலேசாக அடித்தல் (?????)
4) கணவனின் உறவினர்களிலிருந்து
ஒருவரையும் மனைவியின்
உறவினர்களிலிருந்து ஒருவரையும்
மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துதல்
என்பன அல்லாஹ் ஏற்படுத்திய "ஒற்றுமை
ஏற்படும் தீர்வுக்கான" நான்கு
படிமுறைகளாக பலரால் எடுத்துக்
காட்டப்படுகின்றன.
இதில் "இலேசாக அடித்தல்" என்ற
பிரயோகமே மிகுந்த சர்ச்சைக்குரிய
ஒன்றாக உள்ளது. அதற்கு அடுத்த
வரியிலேயே...
//அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி)
பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள்
அஞ்சினால்// என்று அல்லாஹ்
சொல்கிறான்.
அப்படி இருக்க... 'அடித்தால்' பிரிவினை
ஏற்படத்தான் செய்யும்..! இந்நிலையில்
பிணக்கு கொண்ட உள்ளங்களுக்கு
இடையே ஒற்றுமை ஏற்படுத்தும்
முயற்சியில் ஒன்றாக... "அடித்தல்"
என்பது நிச்சமாயக ஒருக்காலும் இருக்க
முடியாது... என்பது மனதின் ஓரத்தில்
லேசாக பொறி தட்டுகிறது..!
அதனால்... அது பற்றி இன்னும்
நிதானமாக ஆராய்வோம்.
மேற்படி, இறை வசனத்தில் வரும்
இலேசாக அடித்துத் 'அடித்தல்' என்று
கருத்துக் கொள்ளப்பட்டுள்ள அரபு மூலச்
சொல் "த்ளரப" ஆகும். இச்சொல்
தெளிவாக வேறுபடுத்திப் பார்க்கத் தக்க
சுமார் 17 வேறுபட்ட பொருள்களைத்
தருகிறது..!!!
அதாவது,
=>நிலத்தைப் பொறுத்து - பயணம், நீங்கிச்
செல்லுதல்
=>காதுகளைப் பொறுத்து -
கேட்பதிலிருந்து தடுத்தல்
=>குர் ஆனைப் பொறுத்து -
புறக்கணித்தல்,
பொருட்படுத்தாதுவிடல், கைவிட்டு
விடுதல்
=>உண்மையையும் பொய்ம்மையும்
பொறுத்து - இரண்டில் ஒன்றை
வெளிப்படுத்தி, ஒன்றிலிருந்து
மற்றொன்றை உதாரணம்/உவமை கூறி
வேறுபடுத்திக் காட்டுதல்
=>திரையைப் பொறுத்து - தலையை
மூடும் திரையை மார்புக்கு மேலாக
இழுத்து விடுவது
=>கடல்கள், ஆறுகளைப் பொறுத்து -
தண்ணீரை விலக்கி அதனூடே ஒரு
பாதையை அமைத்தல்
=>சுவரொன்று எழுப்புவதைப்
பொறுத்து - பிரித்தமைத்தல்,
வேறுபடுத்தல்
=>மக்களைப் பொறுத்து - கேடுகளினால்
சூழப்பட்டு இருத்தல்
=>பாதங்கள், கழுத்து, முகம், முதுகு
என்பவற்றைப் பொறுத்து - வெட்டுதல்,
உந்துதல், அதிர்ச்சி தரல், தாக்குதல்,
அறைதல், அடித்தல்.
முதலான 17 பொருள்களை "த்ளரப" எனும்
அரபு வேர்ச்சொல் தருகிறது.
இதில் 'அடித்தல்' என்ற பொருள் தருவது
அவ்வசனத்துக்கு பொருந்துமா...
அல்லது இதில் வேறு ஏதேனும் ஒரு
பொருளை தருவது அவ்வசனத்துக்கு
பொருந்துமா என்று நாம் சிந்திக்க
வேண்டும்..!
இஸ்லாம், திருமணத்தை ஒரு
புனிதமான ஒப்பந்தமாகக் கருதுகிறது.
குடும்பக் கட்டமைப்பைப் பேணுவதில்
அது மிகுந்த கரிசனம் கொண்டுள்ளது.
எல்லாக் குடும்பத்திலும் முரண்பாடுகள்
எழுவது இயற்கை. அந்த முரண்பாடுகள்,
முறுகல்நிலைகள், சிக்கல்களைத் தீர்க்க
முனைகையில் குடும்ப
உறவுகளிடையேயான அகவயப்பட்ட
உணர்வுகள், பரஸ்பரப் பொறுப்புணர்வு,
அன்னியோன்னியம், பரஸ்பர உரிமைகள்,
கண்ணியம், தன்மானம் முதலான
அனைத்து விடயங்களையும் அது
கருத்திற் கொள்கிறது.
ஆகவே, இந்த அடிப்படையில்... இனி,
மேற்படி வசனத்தின் அடுத்தடுத்த
படிமுறைகளை உற்று நோக்குவோம்:
தவறு செய்துவிட்ட ஒரு மனைவிக்கு
அறிவுரை கூறித் திருத்த முயலுதல்
என்பது முதல் படிநிலை. இதில் ஒன்றும்
பிரச்சினை இல்லை. ஓகே..!
அப்படியும் திருந்தாமல் போனால்...,
"எப்படியும் இரவில் என் தயவை நாடி
இவர் வரத்தானே வேண்டும்!" என்ற
எண்ணத்தில் தன் மீதுள்ள கணவனின்
பாலியல் ஈர்ப்பை, மனைவி ஓர்
ஆயுதமாய்ப் பயன்படுத்த முனையும்
நிலையை "ரோஷத்துடன்"
எதிர்கொள்ளும் வகையில்...
படுக்கையில் இருந்து மனைவியை
விலகுதல்/விலக்கி வைத்தல் என்பன
இரண்டாவது படிநிலை. இதிலும்
ஒன்றும் பிரச்சினை இல்லை. ஓகே..!
இவற்றின் மூலம், தவறு செய்துவிட்ட
பின்பும் தனது தவறை ஏற்காமல் வீண்
கர்வத்தோடு பிடிவாதமாய் இருக்கும்
ஒரு மனைவியைத் திருத்தக் கூடிய இப்
படிநிலைகளின் அடுத்த முறையாக...,
ஒரு பெண்ணுக்கு அவரின் நிலையைப்
புரிந்து கொள்ளும் அவகாசம்
அளிக்கப்படுகின்றது எனலாம்.
கணவனின் பாலியல் இயல்பூக்கத்தைத்
தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தித்
தப்பிக் கொள்ளலாம் என்ற நிலை
வெற்றியளிக்காது என்ற யதார்த்தம்
இங்கு மனைவிக்கு உணர்த்தப்படுகிறது
என்று கொள்ளலாம்.
மூன்றாவதும் நாலாவதும்
படிநிலைகள் என, ((இலேசாக))
அடிப்பதையும், இறுதியாக இருதரப்புப்
பெரியவர்களைக் கொண்டு சமரசம்
செய்து வைப்பதையும்
எடுத்துக்கொண்டால், மூன்றாவது
படிநிலை "கணவன் - மனைவிக்கு
இடையிலான பிரச்சினையைத்
தீர்த்துவைக்கும் முயற்சியின் ஒரு கட்டம்
என்ற வகையில் தர்க்க ரீதியில்
முரணானது" என்பது கூர்ந்து
கவனித்தால் தெரிய வரும். எப்படி?
ஏற்கெனவே மனக்கசப்பில் உள்ள தம்பதியர்
மத்தியில் கணவன் தன் மனைவியை
அடித்தல்/அறைதல்/தாக்குதல்
அவர்களிடையே பிளவையும்
வெறுப்பையும் அதிகரிக்குமா,
குறைக்குமா..?
தான் அவமானப்படுத்தப் பட்டதாக,
துன்புறுத்தப் பட்டதாக மனைவி உணர
மாட்டாரா..? அப்படியான சம்பவத்தின் பின்
சமாதானமும் ஒற்றுமையும் எப்படி
சாத்தியப்படும்..? இனி எப்படி
கணவனுடன் கூடி வாழ மனைவி
விரும்புவார்..?
"எங்க பொண்ணை இந்தாளு இப்படிக்
கைநீட்டி அடிச்சதுக்குப் பின்னால, நாம
எப்படி அவளை அந்தாளுக்கிட்ட திருப்பி
அனுப்பி வைப்பது?" என்று பெண்
வீட்டுக்காரர் கேட்க மாட்டார்களா..? எப்படி
வருவர் சமாதானம் பேச..? இனி அவர்களை
சேர்ந்து வாழ்வது/ வாழ வைப்பது
சாத்தியப்படுமா..?
==1=>?>>குடும்பக் கட்டமைப்பை
இறுக்கமாகப் பேண விழையும்
இஸ்லாத்தில் கணவன் - மனைவிக்கு
இடையிலான முரண்பாடு முற்றிய ஒரு
சூழ்நிலையில் அதனைத் தீர்ப்பதற்கான
படிமுறையில் இப்படி, இடைநடுவில்
"சொதப்பிக் கொள்ளும்" ஒரு
படிநிலையை அல் குர்ஆன் சொல்லி
இருக்குமா..? அடித்தால் பயந்து
கொண்டு அப்படியே நல்ல பிள்ளையாக
திருந்திட மனைவி என்ன தனக்கென தனி
வீராப்பு இல்லாத சின்னஞ்சிறு எல் கே
ஜி ஸ்டூடண்டா..?
==2=>?>>தனக்கும் தம் மனைவியருக்கும்
முரண்பாடு வந்தபோது முஹம்மது நபி
அவர்கள் தமது மனைவியரை
எப்போதாவது அடித்துள்ளார்களா..?
இந்த இரு கேள்வித்தொடர்களும்
இக்கட்டுரையில் மிக முக்கியமானவை.
இந்தக் கேள்விகளுக்கு "இல்லை" என்பதே
பதில். அப்படி என்றால், இந்த வசனம் நமக்கு
உண்மையாக உணர்த்துவது என்ன..?
மாறாக... தனது மனைவிகளுடன்
கோபித்துக்கொண்டு ஒரு மாதம் (29
நாட்கள்) தனித்து வாழ சென்று விட்ட
நபி ஸல்... அவர்களின் சுன்னத்துக்கு எந்த
ஆதாரத்தை நாம் வைப்பது..?
சுன்னத் குர்ஆனுக்கு முரன்படுமா..?
நபி ஸல் அவர்களின் இந்த படிநிலை
மேற்படி நான்கில் எங்கே காணாமல்
போயிருக்குமா..?
இப்படி எல்லாம் சிந்திக்கையில்... நமக்கு
விளங்கிவிடுகிறது.... இப்படி "பிரிந்து
போய் தனித்திருத்தல்" என்பதும் ஒரு
படிநிலைதான் என..! சரிதானே..?
இந்த படி நிலையில் நபி ஸல் அவர்கள்
இருக்கும்போதுதான்... நபியின்
மாமனார் உமர் ரளியல்லாஹு அன்ஹு
தன் மகள் குறித்து மிகவும் கவலை
பட்டவராக... 'ரசூலுல்லாஹ்.,, தன்
மனைவியை தலாக் செய்து
விட்டார்களோ' என்று வந்து கேட்பார்கள்.
இதை ஹதீஸில் கண்டறியும் நாம், 'தலாக்
என்பதுக்கு முந்திய ஒரு படிநிலை
தான் இது' அமீருல் மூமினீன் விளங்கி
வைத்துள்ளதை இங்கே நாம் கூர்ந்து
சித்திக்கையில் அவதானிக்கலாம்.
ஆக, மேற்படி நான்கு படிநிலையும்
பயனளிக்காத போதே பிரச்சினை, தலாக்
(விவாகரத்து) என்ற இறுதி
படிநிலைக்கு பஞ்சாயத்து வருகிறது..!
ஆக நாம் விளங்குவது....அல் குர்ஆனின்
அறிவுரை மனைவியருக்கு
அடிக்குமாறு சொல்லி இருந்தால்,
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் தமது மனைவியரோடு
ஏற்பட்ட முரண்பாட்டின் போது, அதைச்
செய்து இருப்பார்கள். ஆனால், அவர்கள்
அப்படிச் செய்யவில்லை. மாறாக, இந்தத்
தற்காலிகப் பிரிவையே அவர்கள்
கைக்கொண்டார்கள்.
"உங்களில் சிறந்தவர், உங்கள்
மனைவியருக்குச் சிறந்தவரே!" என்ற
அன்னாரின் பொன்மொழி, மனைவிக்கு/
பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள
கண்ணியத்தை விளக்கப் போதுமானது..!
அடிப்பவர் மனைவியிடம் சிறந்தவராக
முடியுமா..?
அபூதாவூத் ஹதீஸ்கள் 2138 , 2139
இரண்டும், மனைவியை "அடிக்க
வேண்டாம்" என்று கட்டளை இடுகின்றன.
Narrated Mu'awiyah al-Qushayri:
"I went to the Apostle of Allah (peace_be_upon_him)
and asked him:
What do you say (command) about our wives? He
replied: Give them food what you have for yourself, and
clothe them by which you clothe yourself, and do not
beat them, and do not revile them. (Sunan Abu-Dawud,
Book 11, Marriage (Kitab Al-Nikah), Number 2139)"
Narrated Mu'awiyah ibn Haydah:
"I said: Apostle of Allah, how should we approach our
wives and how should we leave them? He replied:
Approach your tilth when or how you will, give her
(your wife) food when you take food, clothe when you
clothe yourself, do not revile her face, and do not beat
her. (Sunan Abu-Dawud, Book 11, Marriage (Kitab Al-
Nikah), Number 2138)"
எனவே, அல்குர்ஆன் வசனங்களுக்குச் சில
கலாசார/பாரம்பரிய சம்பிரதாயங்களின்
அடிப்படையில் மேம்போக்காகப் பொருள்
கொண்டால், இது போன்ற தவறான
புரிதல்கள் எழுவதைத் தவிர்க்க
முடியாது.
மாறாக, அல் குர்ஆனின் முழுமொத்தப்
பண்பையும் அது கட்டியெழுப்ப
விழையும் விழுமியங்களையும்
அடிப்படையாக வைத்துக் கொண்டு
ஆராயும்போதே, அதன் வசனங்களுக்கு
நம்மால் உண்மையான பொருளை
உய்த்தறியக் கூடியதாக அமையும்.
இதற்கு திறந்த மனதுடனான ஆழ்ந்தகன்ற
வாசிப்புப் பயிற்சி கைவரப்
பெறவேண்டும். உண்மையைக்
கண்டடையும் வரை இடையாறாது
தேடலில் ஈடுபடும் பொறுமையும்
அர்ப்பணிப்பும் கைவசப்படவேண்டும்.
ஆகவே, பிரச்சினையும் முரண்பாடும்
முற்றிவிட்ட திருமண உறவை சுமுக
நிலைக்கு மீளக் கொண்டு வர முயற்சி
செய்தலை அடியொட்டி, "த்ளரப" என்ற
வேர்ச்சொல்லில் இருந்து பொருள்
கொள்வதாயின்,
===>>>"வீட்டை விட்டுப் 'பிரிதல்', 'பிரிந்து
செல்லல்'
===>>>மனைவியிடமிருந்து எல்லா
நேரமும் 'விலகியிருத்தல்',
===>>>'விளை நிலமான' மனைவியிடம்
இருந்து 'நீங்கிச் செல்லுதல்'
என்றே இப்படி பொருள் கொள்ளப்பட
வேண்டும்..!!!
இதுதான், தத்தமது குடும்பத்துப்
பெரியவர்கள்/ நடுவர்கள் முன்வந்து
இருவரையும் சமாதானப் படுத்தி
வைத்தல் என்ற நான்காவது படிநிலை
யோடு தர்க்க ரீதியாகப் பொருந்திப்
போவதாகவும் அமையும் என்பது
தெளிவு.
ஜஸ்ட் மேற்கண்ட லாஜிக் கிற்காக இந்த
பொருளை கொள்ளவில்லை நாம். :-)
இதையும் கூட நாம் குர்ஆன்
ஆதரப்படியே திடமாக பொருள்
கொள்ளலாம்.
எப்படி..?
பொதுவாக... ﺿْﺮِﺏُ எனும் மூலச்சொல்
வைத்து தேடினால்... சுமார் 54
இடங்களில் மேலே சொன்ன பல்வேறு
பொருள்களில் அவ்வார்த்தை
வந்துள்ளதை நாம் குர்ஆனில் காணலாம்.
http://www.searchtruth.com/search.php?keyword=
%D8%B6%D8%B1%D8%A8&chapter=&translator=1&search=1&search_word=all&start=30&records_display=10&phonetic =
அவற்றில்.....
"உடல் உறுப்புகளை சொல்லி" , எதனால்
எதை அடிக்க வேண்டும் என்று
சொல்லப்படும் வசனங்களில் ...''மட்டுமே''...
இந்த வார்த்தை "அடியுங்கள்"
"வெட்டுங்கள்" என்று பொருள் கொள்ள
முடிகிறது. நான் தேடிய வரை... அந்த
மாதிரி ஆயத்து அப்படி அர்த்தம் வரும்
இடங்கள்... 2:73 , 7:160, 8:12 , 8:50, 38:44, 47:4,27
இப்படி...
அதேநேரம், அதே 'த்ளரப' வார்த்தைக்கு...
அதே குர்ஆனில் இருந்தே..., 'போய்
விடுதல்'... 'பிரித்து வைத்தல்'
'தனித்தனியாக்கள்' , 'விளக்கி வைத்தல்'
'பிரிந்து செல்லுதல்', 'விட்டு விடுதல்'
'பிளவுபடல்', 'நீங்கி செல்லுதல்'... என
இப்படி எல்லாம் பொருள் கொள்ள நம்மால்
ஆதாரம் காட்ட முடிகிறது.
அல்ஹம்துலில்லாஹ்.
அப்படி பொருள் வரும் சில இடங்கள்
நமக்கு குர்ஆனில் இருந்தால்
போதுமானவை...!!! அவை இதோ...!
சூரா : 18 வசனம் 11 (தடை ஏற்படுத்தல்)
சூரா : 24 வசனம் 31 (திரையிட்டு
மறைத்தல்)
சூரா : 25 வசனம் 9 (போய் விட்டார்கள்)
சூரா : 29 வசனம் 43 (பிரித்து வைத்தல்)
சூரா : 30 வசனம் 28 (பிரித்து எடுத்தல்)
சூரா : 43 வசனம் 5 (அகற்றி விடுதல்)
சூரா : 57 வசனம் 13 ((சுவர் எழுப்பி)
தனித்தனியாக்குதல்)
சூரா : 59 வசனம் 21 (பிளவுபட்டு போதல் -
பிளத்தல்)
எனவே, தாளாரமாக... இந்த அர்த்தத்தை
அந்த 'த்ளரப' வார்த்தைக்கு பொருளாக
போட்டுக்கொண்டு... குர்ஆனுக்கு
விளக்கமாக வாழ்ந்த நபி ஸல் அவர்களின்
வாழ்வு மற்றும் ஹதீஸ் ஒளியில்
கணவனுக்கு மனைவியை அடிக்க
அல்லாஹ் உரிமை அளிக்கவில்லை என்ற
முடிவுக்கு திண்ணமாக நாம் வந்து
விட முடியும், இன்ஷாஅல்லாஹ்.
பின்குறிப்பு:
முனைவர் தாஹா ஜாபிர் அல் அல்வானீ,
முனைவர் அப்துல் ஹமீத் அபூ
சுலைமான் ஆகியோர் எழுதியுள்ள
கட்டுரைகள் தமிழிலே "இஸ்லாமியச்
சட்டவியலில் பெண்கள்" எனும் தலைப்பில்
"மாற்றுப் பிரதிகள்" வெளியீடாக 2009 இல்
வெளிவந்துள்ளது. (ISBN: 978 81 908551 43).
அந்நூலை அடிப்படையாக வைத்துக்
கொண்டு சகோ அப்துல்ஹக் லறீனா தன்
முகநூல் பக்கத்தில் எழுதிய குறிப்பின்
துணையுடனும் அதில் இருந்து சில
முக்கிய மாற்றங்கள் மற்றும் அதி முக்கிய
குர்ஆன் ஹதீஸ் ஆதார சேர்ப்பு எல்லாம்
செய்து இக்கட்டுரையை
வெளியிட்டுள்ளேன்.
...என்றும் உங்கள் அன்புள்ள சகோ. ,
~முஹம்மத் ஆஷிக் - citizen of world
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.