"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
6/6/17

தேவேந்திரன்  கட்டுரையாளர்
கத்தார் பிரச்சனை : ( Qatar Crisis ) ( பகுதி 1 )

”அந்த சாலையில் நடந்துபோகும் அந்த சிறுவன், குழந்தையை சுமந்தபாடு இருக்கும் அந்த தாய், பீடி சுற்றிக்கொண்டிருக்கும்  அந்த பெண், ஆட்டோ ஓட்டும் அந்த அண்ணன் உள்ளிட்ட நமக்கு எந்த சம்மந்தமும் இல்லாத ஏதோவொரு உலக பிரச்சனைதான் கத்தார் பிரச்சனை. அதன் பின்புலமும், விளைவுகளும் நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் நம்மைத்தாக்கிகொண்டேயிருக்கும்...”

ஒரு நாட்டின் மீதான இன்னொரு நாட்டின் உச்சகட்ட நடவடிக்கை என்பது தூதரக உறவை முறித்துக்கொள்ளுதல். இது போர்த்தொடுத்தலுக்கு ஒப்பான நடவடிக்கை இது.  ஒரு நாட்டின் ஆத்திரமூட்டும்படியான வளர்ச்சி, அல்லது தங்கள் நாடுகளின் வளர்ச்சியில் பாதிப்பு அல்லது தங்களால் சுரண்ட முடியாத நிலை, அல்லது தங்களுக்கு லாபமில்லாத வளர்ச்சி அல்லது தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு பிரச்சனை என்றாலோ இன்னொரு நாட்டின் மீது இத்தகைய நடவடிக்கையை எடுப்பார்கள்.

பனிப்போர் காலத்தில் சோவியத் ஆதரவு சோசலிச நாடுகள் மீது அமெரிக்க ஆதரவு கேப்பிட்டலிச நாடுகள் இத்தகைய தூதரக உறவு முறித்தல் உள்ளிட்ட பொருளாதாரத்தடைகளை விதித்திருந்தனர். கியூபாவின் மீது இன்னமும்
அதன் தாக்கம் இருந்துகொண்டிருப்பது ஒரு உதாரணம். சோவியத் வீழ்ந்த பிறகான வடகொரியாவின் ஆயுத பெருக்க அச்சத்தால் எள்ளளவும் உலகத்தொடர்பில்லாமல் அந்நாட்டை உலக நாடுகளில் இருந்து துண்டித்து வைத்திருக்கிறோம். கத்தார் அத்தகைய முரண் கொள்கை நாடா?, அல்லது ஆயுத பெருக்கத்தில் அச்சமூட்டுகிறதா?

இல்லை... இல்லவே இல்லை... மற்ற அரபு நாடுகளை போல அதுவும் எண்ணெய் வளம்மிக்க ஒரு  இஸ்லாமிய நாடு, அதுவும் அமெரிக்காவிற்கு ஒரு நட்பு நாடு. குவைத்தை விடவும் சிறிய நாடு. 2022ல் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் அளவிற்கு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் நம்பகத்தன்மையை பெற்ற நாடு.  பிறகு எப்படி இப்படியான ஒரு நடவடிக்கை.

கத்தார் நாட்டுடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக, சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து, மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, நான்கு நாடுகளும்,  தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த நான்கு நாடுகளுடனான அத்தனை உறவுகளிலிருந்தும் நீங்குமாறு கத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதத்திலிருந்து தங்கள் நாடுகளைப் பாதுகாக்க, கத்தார் வழியான எல்லைகளையும் மூடிவிட்டதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டமைப்பு படைகள், ஏமனில் கிளர்ச்சியாளர்கள், தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. ஆனால் கத்தார் நாடோ, அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து அந்த நாட்டை தங்கள் நேச நாடுகள் பட்டியலில் இருந்து வெளியேற்றியுள்ளன இந்த அரபு நாடுகள். சிரியா நாட்டு அதிபர் பஷர் அல்-அசாத்துக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு கத்தார் உதவுவதாகவும், முன்னாள் ஹமாஸ் தலைவர் காலீத் மெஷலுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபான்கள் 2013ல் கத்தார் தலைநகர் தோகாவில் அலுவலகம் திறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள கத்தார், இந்த நடவடிக்கைகளுக்கெதிராகவும் தன்னை தயார்படுத்திவருகிறது.  சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டதாகக் கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளதே அதற்கு உதாரணம்.

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவுவதான இந்த குற்றச்சாட்டுகள் மற்ற அரபு நாடுகளின் மீதும் உள்ளது. துருக்கி உள்ளிட்ட மற்ற நாடுகளின் மீதும் இந்த குற்றச்சாட்டுகளும், சந்தேக பார்வையும் இருக்கும் போது கத்தார் மீதான இந்த நெருக்கடிகளுக்கு நிச்சயம் அரசியல் ரீதியிலான, பொருளாதார ரீதியிலான காரணங்கள் வலுவாக இருக்கும்.

(தொடரும்) 
( கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். நியூஸ்7 தமிழ் பொறுப்பாகாது )
http://ns7.tv/ta/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.