.

.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/2/17

பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் ? என்று ஒரு கல்லூரி மாணவி ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட முக்கிய தொழிலதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

என் வயது 25.... நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். 

அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்று அந்த அழகான பெண் அந்த தொழிலதிபரிடம் கேள்வி எழுப்புகிறார்.
அப்பெண்ணிற்கு பதில் அளித்து அந்த தொழிலதிபர் கூறியதாவது, “உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன்.
 
எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால் இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும்.

அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும் ஒன்று. பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும் ஒன்று. பொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் என்பவன் அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் என்பவள் தேய்மானம் அடையும் சொத்து ஆகும் .

ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார்.

வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்.

எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்.” என்றார் அந்த தொழிலதிபர்.
அந்த தொழிலதிபர் வேறு யாருமல்ல .. 

முகேஷ் அம்பானி தான்
-முகநூல் பதிவிலிருந்து
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.