.

.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
31/1/17

புனித உம்ரா மற்றும் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற மக்கா சென்று திரும்பிய யாத்ரீகர்கள் புனித காபாவின் தவாப் சுற்றும் தரை பகுதியில் கடும் கோடை காலத்திலும் ஜில்லென்று பாதத்திற்கு கீழ் சுகமாக இலங்குவதை அனுபவித்திருப்பீர்கள், என்ன காரணம்?

இதுவரை பரவலாக, கிரேனைட் மார்பிள்களுக்கு அடியில் செலுத்தப்படும் நீர் மற்றும் ஒருவகை ஜெல்லால் (Gel) தான் ஜில்லென்று இருக்கின்றதென என நம்பப்பட்டு வந்தது ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல.

புனித ஹரம் ஷரீஃப் எங்கும் 3 வகையான கிரானைட் மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 'தவாப்' சுற்றும் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள வெண்ணிற மார்பிள் கற்கள் 120 செ.மீ நீளமும் 60 செ.மீ அகலமும் உடையவை. இதன் உயரம் 5 செ.மீ மட்டுமே. கோடையில் கடும் சூட்டை உமிழும் சூரியக்கதிர்களை உள்ளிழுக்காமல் அப்படியே திருப்பி அனுப்பும் தனித்துவ தன்மையுடையவை இந்த மார்பிள் கற்கள். இப்படியாக கடும் சூட்டை திருப்பியனுப்புவதால் (Reflects Back) தான் புனித காபாவின் தரைப்பகுதி எப்போதும் 'சில்லென்று' சுகமாக விளங்குகிறது.

மிகவும் அரிதாக கிடைக்கக்கூடியதும், விலை மதிப்புமிக்கதுமாக இந்தக் கற்களின் பெயர் 'தஸ்ஸோஸ்' (Thassos) அல்லது 'அல்தாஸ்' (Altass) என்று அழைக்கப்படுகின்றன. இவை கிரீஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும் என இரண்டு புனிதத் தலங்களுக்கான நிர்வாகத் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.