.

.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
24/1/17

துபையில் வசிக்கும் ஒவ்வொருவரும் சாராசரியாக ஆண்டொன்றுக்கு 17.2 கிலோ மின்னனு கழிவுகளை வீசி எறிகின்றனர். இத்தகைய மின்னனு கழிவுகளை (e-waste) சேகரிப்பதற்காக மட்டும் ஸ்மார்ட் குப்பை தொட்டிகளை (smartest e-bin) அறிமுகப்படுத்தவுள்ளது துபை அரசு.

குப்பை தொட்டியின் மேல் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் சக்தி மூலம் இயங்கும் இந்த குப்பை தொட்டிகள் நிரம்பியவுடன் சம்பந்தப்பட்ட கழிவு மேலாண்மை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும். மேலும் மின்னனு குப்பை தொட்டியின் கொள்ளளவு நிரம்பியிருந்தால் அதுகுறித்த தகவலை பயனாளர்களுக்கு தெரிவிப்பதுடன் காலியாக பக்கத்தில் இருக்கும் அடுத்த மின்னனு குப்பை தொட்டிகள் குறித்த விபரங்களை எல்ஈடி காட்சித்தகடுகள் (LED Display) வழியாக தகவல் தரும். மேலும், நாம் போடு குப்பை அந்தத் தொட்டியில் போட உகந்ததா? இல்லையா? எனவும் அறிவுறுத்துவதுடன் முன்பதிவு (Administrator Registration) மூலம் லாக்ஆன் (Log On) செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

உயர்தர கார்பன் இழைகளை (High Quality Carbon Fiber) கொண்டு உருவாக்கப்படவுள்ள இந்த மின்னனு குப்பைத் தொட்டிகள் 2020 ஆண்டு நடைபெறவுள்ள துபை எக்ஸ்போ (Dubai Expo 2020) எனும் சர்வதேச கண்காட்சியை தொடர்ந்து துபை முழுவதும் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்த குப்பைத் தொட்டியில் சேகரிக்கப்படும் மின்னனு கழிவுகள் அனைத்தும் மறுசுழற்சி (Re-cycle) மூலம் மறுபயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.