இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்த தனது மனைவியின் போட்டோவை போஸ்புக்கில் ஷேர் செய்ததன் விளைவாக பல்வேறு விமர்சனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் அவர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது ஷமி மேற்கு வங்க அணிக்காக ஆடி இந்திய அணியில் இடம் பிடித்த 26 வயது இளம் வீரராகும். சில மாதங்கள் முன்புதான் இவருக்கு பெண் குழந்தையொன்று பிறந்திருந்தது.
தற்போது முட்டி காயத்தால் இந்திய அணியில் இருந்து விலகியிருக்கும் அவர் பொழுதுபோக்காக பேஸ்புக்கில் தனது மனைவி குழந்தையோடு இருக்கும் போட்டோவையும் மனைவியோடு தனியாக எடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்திருந்தார். இந்த போட்டோக்களில் முகமது ஷமி மனைவி ஹசின் ஜகான் ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்திருந்தார்.
இதைப்பார்த்த முஸ்லிம்கள் பலரும் பெண் உடலை முழுக்க போர்த்தியபடிதான் போட்டோ ஷேர் செய்திருக்க வேண்டும் இப்படி ஸ்லீவ் லெஸ் இருக்க கூடாது என விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர்.
இதற்கு முகமது ஷமியின் பிற ரசிகர்களும் கமெண்டில் விமர்சனம் செய்துள்ளனர். மற்றொரு கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஷமி மனைவி ஆடை குறித்து பிறர் விமர்சனம் செய்ய கூடாது என டிவிட்டரில் கைஃப் தெரிவித்துள்ளது வேறுகதை...
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.