"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)

.

.
20/12/16

எனக்குள் நிறைய தேடல்கள் இருந்தது. கடவுள் எப்படி இருப்பார்.எந்த உருவத்தில் இருப்பார்.என்றெல்லாம் அடிக்கடி யோசிப்பேன்..!

அந்தத் தேடல் என் அம்மாவின் மரணத்தின்போது வேறுவிதமாக எனக்கு உணர்த்தியது.

ஒரு நாள் நான் மும்பையிலிருந்து சென்னை திரும்பியபோது வீட்டில் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் அதிகமாக இருமத் தொடங்கினார்.
நானும், என் தங்கையும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். நான்தான் காரை ஓட்டினேன்.

மருத்துமனையை அடைந்தபோது என் பக்கத்தில் இருந்த அம்மாவின் கையைப் பிடித்தபடியே இருந்த நிலையில், என் அம்மா என் கண்ணெதிரிலேயே உயிர் துறந்தார்.

நான் கதறியழுதேன். சில நொடிகளுக்கு முன் உயிருடன் இருந்தவர் இப்போது இல்லை. அவரது ஆத்மா எங்கே போயிருக்கும் என்று குழப்பமாக இருந்தது..!!

நான் பதிலை மட்டுமே தேடிக் கொண்டிருந்தேன்..!

கொண்டிருக்கும்போது அல்லாவிடம் இருந்து எனக்கு நேரடியாகவே அழைப்பு வந்தது.
அதுவொரு இனிமையான அனுபவம். எனது நெருங்கிய நண்பர் மெக்காவில் இருந்து அப்போதுதான் திரும்பியவர். தொழுகை செய்யும் விரிப்பை எனக்கு பரிசாகக் கொடுத்தார்…!

அவர் மெக்கா சென்றிருந்தபோது அங்கிருந்து கொண்டு வந்தது என்றும் இது ‘மெக்காவை தொட்ட தொழுகை பாய்’ என்றும் சொன்னார். “எப்போதெல்லாம் மனக்கஷ்டமா இருக்கியோ, அப்போது இதன் மேல் அமர்ந்து கொள். மனம் சாந்தியாகும்…” என்றார்.

அவர் கொடுத்த அந்த தொழுகை பாயை, அப்போதைக்கு சுருட்டி என் அறையில் ஒரு மூலையில் வைத்துவிட்டு எனது பணிகளை கவனிக்க துவங்கினேன்..! தொழுகை பாயை மறந்தே போனேன்..!

2012-ம் ஆண்டில் ஒரு நாள், என் தாய் பற்றி எனது உறவினருடன் பேசினேன். சட்டென்று எனது அம்மாவின் நினைவுகள் வர அழுது கொண்டே எனது அறைக்கு திரும்பினேன்.

என் கண்களில் அந்த தொழுகை விரிப்பு தென்பட்டது..! அதுவரை அது அங்கிருந்ததையே மறந்திருந்தேன். அன்றைக்கு அதைப் பார்த்தவுடன் அழுதபடியே அதில் அமர்ந்தேன்.
‘கடவுளே என் பாவங்களை மன்னித்தருளும்’ என்றேன்.

அந்த கணமே என் மனபாரம் குறைந்து லேசானதை போல இருந்தது..! யாரோ என் தலையில் கை வைப்பது போலவே உணர்ந்தேன்..!
அதன் பின் குரானையும் மொழி பெயர்ப்புகளையும் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து இஸ்லாத்தை பின்பற்ற ஆரம்பித்தேன்.

2014ஜனவரி மாதத்தில் தொழுகை செய்வதையும் கற்றுக் கொண்டேன்.
தற்போது ‘யுவன்சங்கர் ராஜா’ என்ற பெயரிலேயே திரைப்படங்களில் நான் பிரபலமாக இருப்பதால் உடனடியாக பாஸ்போர்ட் உட்பட்ட ஆவணங்களில் எனது பெயரை மாற்றப் போவதில்லை. பின்பு மாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
கடைசியாகத்தான் அப்பாவிடம் இது பற்றிச் சொன்னேன்.

அப்பா, “யுவன்.. நீ இஸ்லாத்துக்கு மாறுவது எனக்குப் பிடிக்கலை” என்று மட்டுமே சொன்னார்.
ஆனால், எனக்கு என் அப்பாவை விட அல்லாஹ் பெரிய விஷயமாகத் தோன்றினான். அண்ணனும், அண்ணன் மனைவியும் இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தந்தார்கள்..!

நான் தொழுகை செய்யும் நேரங்களில் எனது அம்மாவே என் கையைப் பிடித்து, ‘யுவன் நீ தனிமைல இருக்குற நான் இஸ்லாம் என்ற பெயரில் உனக்கு அடைக்கலம் தரும் மரமா இங்க இருக்கிறேன்.’ என்று சொல்வதாக உணர்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

யா அல்லாஹ்..நீ அளவில்லா அருளாளன்..!!

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.