"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
1/12/16

சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டும் காலம் வந்துவிட்டது இளவரசர் அதிரடி தகவல் சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓட்ட சட்டப்பூர்வமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் வங்கி கணக்குகள் தொடங்குவது கல்வி கற்பது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட பல விஷயங்களில் அந்நாட்டு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில் அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசரான அல்வலீட் பின் தலால் டுவிட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.’சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவது என்பது மிக அவசியமான தேவை’ என தலைப்பிட்டு இளவரசர் அக்கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7    

அதில் ‘பெண்களை வாகனங்கள் ஓட்ட அனுமதி மறுப்பது என்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு சமமானது. பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது என்பது சமூக அந்தஸ்த்தை உயர்த்திகொள்வதற்காக இல்லாமல் அது ஒரு அவசிய தேவையாக தற்போது மாறியுள்ளது. மேலும் பெண்கள் வாகனங்களை இயக்க அனுமதி அளிப்பதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ எனவும் இளவரசர் அதில் கருத்து தெரிவித்துள்ளார். அரசக் குடும்பத்தில் இருந்து அரசாங்கத்திற்கு எதிராகவும் பெண்களுக்கு ஆதரவாகவும் இளவரசர் வெளியிட்டுள்ள இக்கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பரபரப்பபையும் ஏற்பாடு வருகிறது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.