"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
8/11/16

1. ஆண்மைக் குறைவு என்றால் என்ன?
2.  ஆண்குறி எவ்வாறு விறைப்படைகிறது?
3. ஆண்மை குறையு ஏற்பட காரணங்கள்?

1. ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்?
2. ஆண்மை குறைவின் விளைவுகள் யாவை?
3. ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம் ?
4. மருத்துவம் மற்றும் பொதுவான அறிவுரைகள்

ஆண்மைக் குறைவு என்றால் என்ன?

இன்றைய நாகரீக உலகில் "பாலியல் உறவுகளை" பற்றி பல்வேறு கருத்துக்கள் உலவி வருகின்றன. இல்லற வாழ்க்கையை இன்பமாய் அமைக்க தாம்பத்ய உறவும் மிக அவசியம். இன்று ஒரு ஆண் தன்னுடைய ஆண்மையை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டான். ஏனென்றால் குழந்தையில்லாத ஒரு ஆணை இவ்வுலகம் ஆண்மையில்லாதவன் என்றே கூறுகிறது. 

ஆனால் பழங்காலத்தில் ஒரு ஆணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருந்ததாகவும், அத்தனை பேரையும் இல்லற உறவில் திருப்பதி அடையும் அளவிற்கு அவனிடம் உடல் வலிமை யாகவும், அயரா உழைப்பும், ஊக்கமான உணவு பழக்கங்களும் இருந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன. 

குழந்தையில்லாத அனைவரும் "ஆண் மையற்றவர்கள்" என்று கூறுவது மிகப் பெரும் தவறு. இனி ஆண்மைக் குறைவு பற்றி விரிவாக காணலாம்.
ஒரு ஆண் தாம்பத்ய உறவில் ஈடுபடும் பொழுது தன் குறியில் விரைவில் ஏற்படும் விறைப்பு தளர்ச்சியினாலோ (அல்லது) விறைப்பு ஏற்படுவதில் அதிக நேரமானாலோ அல்லது விறைப்பே ஏற்படாமல் அந்த செய்கையை முழுமையாக செய்ய முடியாமல் போவதையே "ஆண்மைக் குறைவு " என்கி றோம்.

ஆண்குறி எவ்வாறு விறைப்படைகிறது?  
(REIDITY) :  

ஆண்குறியிலிருந்தோ அல்லது மூளையிலிருந்தோ ஏற்படும் நரம்பு தூண் டல்களால் ஆண் குறிக்கு இரத்தத்தை கொண்டு வரும் (HELICINE) ஹெலி னசன் என்னும் தமனிகள் (ARTERY) விரிவடைந்து, இரத்த ஓட்டம் அதிகரிக்கப் பட்டு குறியில் உள்ள விறைப்பு தசைகளில் (CARPORA CARVEROSA) உள்ள (LACUNAR SPACES) லஃகுனார் ள்ல்ஹஸ்ரீங்-ல் இரத்தம் நிரம்பும் போது ஏற்படும் அழுத்தத்தில் குறி விறைப்படைய தொடங்குகிறது. அப்போது குறியிலிருந்து அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் (VENIS) சிரையை அது அழுத்தி குறியிலிருந்து இரத்தம் எடுத்துச் செல்லப்படுவது தற்காலிகமாக நிறுத்தப் படுவதால் விறைப்பு நிலைக்கிறது. உள்ளே வரும் இரத்தம் நிறுத்தப்பட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும் VENOUS OUTFLOW நடக்கும் பொழுது குறி மீண்டும் தளர்ச்சியடைகிறது.

 ஆண்மை குறையு ஏற்பட காரணங்கள் :  

 1. இரத்த ஓட்ட காரணிகள் : 
ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்படுவதில் தாமதமோ அல்லது ஏற்படா மலே இருக்க அந்த பகுதிக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாதுதான் முதன்மையான காரணம். ATHEROSCLEROSIS என்னும் நோயில் இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதா லும், குறி பகுதிகளில் ஏற்படும் காயங்களால், இரத்தக் குழாய்கள் கடினப்பட்டு சுருங்கி இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

புகைப்பிடித்தல், உடல் பருமன் இவற்றால் இரத்த ஓட்டம் நிறைய பேருக்கு தடைபடலாம் என்பதில் ஐயமில்லை.

சில ஆண்களுக்கு, குறிக்கு எடுத்து வரப்படும் இரத்த அளவைவிட அதிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படும் ‘VENOUS OUTFLOW அதிகமாயிருந்தால் விறைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

பொதுவாக மன அழுத்தம், அதிக உடற்பயிற்சி, இருதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றில் இவ்வாறு ஏற்படலாம்.

சில நேரங்களில் உள்ளிருக்கும் விறைப்பு தசைகளில் (ELASTIC FIBRES) போதிய அளவு ஏற்படாமல் அது சிரைகளின் மீது(TUNICA VENIS) அழுத்தம் தரமுடியா விட்டாலும் ஏற்படலாம்.

பொதுவாக வயதானவர்கள், அதிக கொலஸ்டிரால் அளவு, ஆஸ்த்மா, இரத்த சோகை உள்ளவர்கள் இவ்வாறு பாதிக்கப் படலாம்.

2. நரம்பு மண்டல காரணிகள் :  
முதுகு தண்டுவட நரம்புகள் குறிப்பாக பின் அடி முதுகில் ஏற்படும் பாதிப்புகள் ஒரு ஆணை "IMPOTENT" ஆக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்த மாதிரியான பிரச்சனைகளில் 75 %பேர் குறைவான விறைப்பு தன்மையும் 25 % பேர் மட்டுமே பெண் குறியினுள் செலுத்தும் அளவிற்கு வீரியத்தையும் பெற்றிருப்பார்கள்.

இவை பொதுவாக " மல்டிபிள் ஸ்கிளிரோஸிஸ்" மற்றும் "பெரிமிரல் நியூரோபதி என்னும் நோய்களில் காணப்படும்.

இந்த PERIPHERAL NEUROPATHY நோய் ஏற்பட நீரிழிவு நோயும் அதிகமது பழக்கமும் ஒரு காரணமாகும்.

இடுப்பு எலும்பு கூட்டுப் பகுதியில் (PELVIS) ஏற்படும் அறுவை சிகிச்சைகள் குறிப்பாக பிராஸ்டேட், சிறுநீர் பை, போன்றவைகளில் பிரச்சினை களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளால் "தானியங்கு" (AUTOMATICNERVES) நரம்புகள் அல்லது தமனிகள் பாதிக்கப்பட்டு IMPOTENCE ஏற்படலாம்.

கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பின் போதும், நரம்புகள் பாதிக்கப்படலாம்.

3. ஹார்மோன் காரணிகள் :  

பாலியல் எண்ணங்கள் அல்லது காட்சிகள் அல்லது உறவுகளின் போது "டெஸ்ட்டோ ஸ்ட்ரோன்" என்னும் ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு ஆண் குறி விறைப்படைகிறது.

"ஹைபோகோன்டிஸ்ம்" என்னும் நோயில் செக்ஸ் உறவுக்கு தேவையான அளவு இந்த"டெஸ்ட்டோஸ்ட்ரோன்" சுரப்பு இல்லாமை யால் அல்லது குறைவால் ஆண்மை குறைவு ஏற்படலாம்.

"ஹைபர்புரோலக்டினிமீயா"என்னும் நோயில் ‘PROLACTIN ’எனும் ஹார்மோன்அதிகம் சுரக்கிறது.இதனால் ‘TESTROSTERONE’ ஹார்மோனின் அளவில் குறைவு ஏற்படுகிறது. இதன் மூலம் ஆண்மை குறைவு ஏற்படுகிறது.

"ஹைப்பர்தைராய்டிஸம்" என்னும் நோயிலும் ஆண்மைக் குறைவு ஏற்படலாம்.

4. நீரிழிவு காரணிகள்:  
பொதுவாக 35-75 % நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படலாம்.

மேற்கூரிய இரத்த ஓட்ட அல்லது நரம்புகாரணிகள் இதை உண்டாக்குகிறது.

எந்தவொரு நீரிழிவு நோய் உள்ள ஆணுக்கும் "ஆண்மைக் குறைவு" ஏற்பட்டிருந்தால் அது "டயாபடிக் நியூரோபதியின்" ஆரம்ப கால அறிகுறியாகும்.

நரம்பு அல்லது நாளமில்லா திசுக்களில் நைட்ரிக் அமிலம் உருவாக்கம் குறைந்துபோவதும் பாதிப்புகளுக்கு ஒரு காரணமாகும்.

5. மனசு சார்ந்த காரணிகள் :  
அதிக கவலை
மன அமைதியற்ற, நம்பிக்கையில்லா தாழ்வுநிலை
நெருங்கிய நட்பில் பிளவு
கவர்ச்சியில்லாத மனைவி
குழந்தை வயதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள்
கர்ப்பமாகிவிடுவார்களோ என்ற பயம்
பால்வினை நோய்கள் தொற்றிவிடுமோ என்ற அச்சம்
மனரீதியான தோல்விகள்
தனிமையான அறையில் தாம்பத்ய உறவு முடியாமல் உள்ள கூட்டு குடும்ப முறை
உடலுறவு பற்றிய பயம்
ஆர்வமில்லாத உடலுறவு

6. மருந்துகளால் ஏற்படும் ஆண்மைக் குறைவு : 
25 % ஆண்கள் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளால் ஆண்மைக்குறைவை பெற்றுள்ளனர்.

இரத்த கொதிப்பு நோய்க்கு தரப்படும், மருந்துகள் நேரடியாக ஆண்குறியின் விறைப்பு தசை (CARPORA) ல் பாதிப்பு ஏற்படுத்துவதாலும், மறைமுகமாக PELVIC(இடுப்பு எலும்பு பகுதிக்கு) இரத்த ஓட்டத்தை குறைப்பதாலும் ஆண்மை குறைவு ஏற்படலாம்.

ஈஸ்ட்ரோஜன், அலசருக்கு தரப்படும் RANITIDINE,CIMETEDINE மற்றும் டையுரடிக்ஸ், போன்ற மருந்துகள் எஞசஅஈஞபதஞ டஏஐச உருவாகுவதை குறைப்பதாலும் மற்றும் ANDROGEN ஹார்மோன்

7. வேலைகளை தடுப்பதாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.  
அதிக கொலஸ்டிரால் மற்றும் இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தரப்படும் DIGOXIN, GEMFIBROZIL, CLOTIBRATE போன்ற மருந்துகள் "Na+ -K+ATPASE "என்னும் என்சைம் செல்லின் செயல்களில் பாதிப்பு ஏற்படுத்தி செல்சுவரை தாண்டி செல்லுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கிறது.
 
ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்?  

தாம்பத்ய உறவில் விருப்பம் இல்லை.
உடலுறவில் உச்சநிலையை அடையவதில்லை.
வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது.

ஆண்மை குறைவின் விளைவுகள் யாவை?
 தூக்கமின்மை
 மன அழுத்தம்
 வாழ்க்கை பற்றிய பயம்
 வீட்டிற்கு வருவதை தவிர்த்து வெளியிலேயே அதிகம் இருத்தல்
 தற்கொலை எண்ணங்கள்
 விவாகரத்து
 சந்தேகப்படுதல், அதிக கோபமாயிருப்பது போல் நடித்தல்

ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம் ?  
TESTPSTERON ஹார்மோன் அளவில் குறைதல்
 FSH ஹார்மோன் அளவில் குறைதல்
 ப3, ப4 ஹார்மோன் அளவில் குறைதல்
 முழு இரத்த பரிசோதனை - நீரிழிவு, கொலஸ்டிரால் எலக்ட்ரோலைட்
 PROLACTIN ஹார்மோன் அளவில் அதிகமாதல்
 அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் – பிராஸ்டேட் சுரப்பி வீக்கம்
 PENILE DOPPLER SCAN- குறியில் தமனிசுருக்கங்கள் (ART CONSTRICTION), தமனி அடைப்புகள் (ARTERIAL BLOCK) சிரையிவல் அதிக அளவு இரத்தம் எடுத்துச் செல்லப்படுதல் (VENOUS LEAK)
 RIGI ஸ்கேன் - தொடர்ந்து இரு இரவுகள் எடுக்கப்படலாம்.(IN SLEEP LAB) 

இரவில் எப்போதாவது ஆண்குறி விறைப்பு அடைந்துள்ளதா என்பதை அறிந்து உடல் ரீதியான அல்லது மன ரீதியான காரணங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

சாதாரணமாக ஆண்களுக்கு அதிகாலை நேரங்களில் 2 அல்லது 3தடவை குறி விறைப்பு ஏற்படவில்லை என்றால் அது உடல் ரீதியான பிரச்சினைகள் அதாவத தமனிச் சுருக்கம், அடைப்பு, யஉசஞமந கஉஅஓ காரணம் என கொள்ளலாம்.

ஆண்குறியை தொடும்போது உணர்ச்சி குறைவாக இருந்தால் நரம்பு பாதிப்பு எனலாம்.
அதிகமாக உடம்பில் மயிர் வளர்ச்சி, தலைவலி, வழுக்கை, மார்பக விரிவு இவைகள் ஹார்மோன் பாதிப்பு எனலாம்.

 மருத்துவம் மற்றும் பொதுவான அறிவுரைகள் :  

பொதுவாக அதிகாலையில் உடலுறவு செய்யலாம்.

ஒரு தாம்பத்ய உறவிற்கும் தொடர்ந்து அடுத்த உறவிற்கும் அதிக இடைவெளி கூடாது. (வாரம் அல்லது 15 நாட்களுக்கு 2 அல்லது 3 முறை இன்றை நிலைக்கு ஏற்ப)

நேரடியாக உடலுறவை தவிர்த்து FOREPLAY செய்து உடல் கிளர்ச்சியடைந்த பின்பு செய்யலாம்.

மார்க்கெட்டில் கிடைக்கும் மாத்திரைகள் முதலில் நன்கு வீரியமாகத்தான் இருக்கும். நாளடைவிமல் "ஆண்மைக் குறைவை" கண்டிப்பாக ஏற்படுத்தும்.

ஆண்மைக் குறைவு அறிகுறிகள் ஏற்படுமாயின் தயங்காமல் மருத்துவரை அணுகவும், உங்கள் வெட்கம், பயம், தயக்கம், அறியாமை இவற்றை சாதகமாக பயன்படுத்தி பணம் பறிப்போர் ஏராளம்.

ஆண் உறுப்பு சிறியதாக உள்ளது என கவலைப்படும் ஆண்கள் பலர். உண்மையிமல் பெண்ணி யோனிக்குழாயில் (VEGINA) 4 முதல் 5 செ.மீ. அதிக கிளர்ச்சி மிக்க பகுதியாகும். இதுவே அவர்களை உச்சநிலைக்கு அடைய செய்ய முடியும்.

-Dr. J. ஷெல்டன் அருள்தாஸ் B.E.M.S. & Dr. G. சீனிவாசன் M.D.(E.H)
- வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் 
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.