"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/11/16

அமெரிக்க அதிபராக‌ யார் பதவி ஏற்றாலும் எங்களுக்கு கவலையில்லை என வட கொரியா அரசு அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.

வட கொரியாவில் நிகழ்ந்து வரும் மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிக்கும் விதத்தில் ஐ.நா சபை தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குனரான கிம் யோங் ஹோ இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

அப்போது, அமெரிக்க அதிபராக‌ டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றதை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு கிம் யோங் ஹோ பதிலளித்தபோது, ‘அமெரிக்காவின் அதிபராக‌ யார் பதவி ஏற்றாலும் எங்களுக்கு கவலையில்லை.

ஆனால், வட கொரியா மீது அமெரிக்க கொண்டுள்ள விரோத கொள்கை முடிவுகளை திரும்ப பெற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதில் தான் தனது நாடு அக்கறை செலுத்துவதாக’ அவர் அதிரடியாக பதிலளித்துள்ளார்.

வட கொரியாவில் மனித உரிமைகள் மீறல் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அந்நாட்டில் அணு ஆயுத பரிசோதனை நடைபெற்று வருவதால் கடந்த 2006ம் ஆண்டு முதல் அந்நாட்டின் மீது ஐ.நா சபை பொருளாதார தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.