தண்ணீர் நமது உடலை சீரான முறையில் இயக்க முக்கியமான பொருளாக திகழ்கிறது. சரியான இடைவேளையில் நீரை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டால் உடல் பாகங்களின் செயல் திறனில் குறைபாடு ஏற்பட துவங்கும், முக்கியமாக மூளையில். சில நேரங்களில் நீரை பருகுவது தவறானது என்றும் கூறப்படுகிறது.

காலை எழுந்ததும் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.இது, உங்கள் உடலை சுத்திகரிப்பு செய்ய உதவுகிறது. எலுமிச்சை அல்லது தேன் கலந்து குடிப்பது உடல் சக்தியை அதிகரிக்கும். இப்படி தினமும் நீர் பருகுவதால் உடலில் இருக்கும் நச்சுக்கள் அழிந்து உடல் பாகங்கள் நன்று செயல்படும் என கூறப்படுகிறது.உணவருந்தும் அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் நீர் பருகுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.உணவருந்தும் போது நீர் வேண்டாம் உணவருந்தும் முன்பு அல்லது உணவருந்திய உடனே நீர் பருக வேண்டாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இது செரிமானம் செய்யும் சுரப்பியின் செயல்திறனை குறைக்கிறது என்று கூறப்படுகிறது.மோர் அல்லது தயிர் உணவருந்தும் போது தண்ணீருக்கு பதிலாக மோர் அல்லது தயிராய் உட்கொள்ளலாம். இது உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு சேர்த்து செரிமானத்திற்கும் உதவுகிறது.பசியின் போது தண்ணீர் பசி ஏற்படுவது போல இருந்தால் முதலில் கொஞ்சம் நீர் பருகுங்கள். பத்து நிமிடம் கழித்தும் மேலும் பசிப்பது போல இருந்தால் சிறிதளவு உணவருந்துங்கள். இவ்வாறு செய்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.சோர்வாக இருக்கும் போது தண்ணீர் நமது மூளையில் 75% மேல் தண்ணீரின் பங்கு தான் இருக்கிறது. மூளை சுறுசுறுப்பாக செயல்பட நீரின் பங்கு முக்கியமானது. வேலை நேரங்களில் நீங்கள் சோர்வாக உணரும் போது நீர் பருகுவதால் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்க முடியும்.காலை வேளையில் அதிகமாக நீர் பருகுங்கள், இதனால் உங்கள் உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.மாலை வேளைகளில் குறைவாக நீர் பருகுங்கள். இது இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் வரும் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். உடற்பயிற்சி செய்யும் முன்னர் மற்றும் செய்த பின்னர் நீர் பருகுவதால் தசைகள் வலுப்பெறுகின்றன. மற்றும் இதனால் உடலில் நீர்வறட்சி ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.உடல்நல குறைபாடு உள்ளவர்கள் அதிகமாக நீர் பருகுவதால் விரைவாக குணமைடைய முடியும். மற்றும் கர்ப்பிணி பெண்கள், தாய்பால் கொடுக்கும் பெண்கள் கொஞ்சம் அதிகமாக நீர் பருக வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் 10 டம்ளர் நீராவது பருக வேண்டும் என்று கூறப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.