"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/11/16

தற்போது அதிக அளவில் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளை தம்பதிகள் எதிர்கொள்கின்றனர். இதற்கு காரணம் ஆண், பெண் இருவராக இருந்தாலும் ஆண்களின் விந்தணுக்கள் குறைவும் ஒரு முக்கிய காரணமாகும்.

ஆண்களுக்கு இயற்கையாக விந்தணு குறைபாடு ஏற்படுவதை விட தங்கள் பழக்கவழக்கங்களால் அதிகமாக இந்த குறைபாடு ஏற்படுகிறது. அதில் ஆறு முக்கிய காரணங்கள் உள்ளன அவை பின்வருமாறு.

* பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் போது ஒரு கரிம செயற்கை கலவை சேர்க்கப்படுகிறது. இந்த கலவை ஆண்களின் விந்தணுக்களை குறைக்கிறது. எனவே பிளாஸ்டிக்கை எரிப்பதை தவிர்க்க வேண்டும் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

* செல்போன்களாலும் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது. ஆண்கள் தங்கள் பின்புறம் செல்போனை வைக்கும் போது அதில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள், கதிரியக்கங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கின்றது.

* வெப்பம் அதிகமான இடங்களில் ஆண்கள் அதிக நேரம் இருந்தால் விந்தணு குறைபாடு ஏற்படும். 4 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் இருக்கும் போது சரியான அளவில் விந்தணு உற்பத்தியாகும்.

* அதிகமான உடல் பருமன் உள்ளவர்களுக்கும் விந்தணு குறைபாடு ஏற்படும். உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

* புகைப்பிடித்தல் பழக்கம் இருக்கும்போது அது இரத்த ஓட்டத்தை குறைத்து விந்தணுக்கள் எண்ணிக்கையையும் குறைக்கும்.

* அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் விந்தணுக்கள் குறைபாடு ஏற்படும்.

* அதிக அளவில் மன அழுத்தத்தில் உள்ள ஆண்களுக்கு ஆண்மை பாதிக்கும். எனவே மன அழுத்தம் பிரச்சனையிருந்தால் அதனை சரிசெய்து வாழ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7 


மன அழுத்தத்தை குறைக்க இஸ்லாத்தில் ஒரு அருமையான வழி உண்டு, அதுதான் தொழுகை, ஐவேளை தொழுபவரிடம் மன அழுத்தம் இருக்காது

திருக்குரான் 2:277
(நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டுபவர்களுக்கு இறைவனிடத்தில் நற்கூலி உண்டு, அவர்களுக்கு எந்தஅச்சமும் இல்லை, அவர்கள் கவலை படவும் மாட்டார்கள்)
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.