26/10/16

இது காதில் பூச்சுற்றும் கதையல்ல, இது நவீன மருத்துவத்தால் சாத்தியமான நிஜம்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரின் குழந்தைகள் நல மருத்தவமனையிலேயே இந்த மருத்துவ அதிசயம் நிகழ்ந்துள்ளது. கருவுற்றிருந்த 16 வது வாரத்தில் மார்க்கரெட் போய்மர் என்பவர் தனது வழக்கமான மருத்துவ சோதனைகளுக்காக செல்ல, அங்கு அல்ட்ராசவுண்ட் சோதனையில் குழந்தையின் tailbone பகுதியில் சதைக்கட்டி ஒன்று வளர்வதை கண்டறிந்தனர்.

மருத்துவர்கள் ஒரு சிலர் குழந்தையை களைத்துவிடுவதே நல்லது என அறிவுரை வழங்க டாக்டர் ஒலுயிங்கா மட்டும் குழந்தை பிழைக்க 50 சதவிகிதமே வாய்ப்புள்ளது என்ற நிலையில் துணிந்து களத்தில் இறங்கினார்.

மார்க்கரெட் அவர்களின் 23 வது வாரத்தில் ஆபரேசன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டு 20 நிமிடத்தில் சதைக்கட்டி அகற்றப்பட்டு மீண்டும் தாயின் கர்ப்பப்பைக்கு உள்ளேயே மீண்டும் வைக்கப்பட்டது என்றாலும் இந்த ஆபரேசன் முழுமையாக நிறைவடைய 5 மணிநேரமாகியது. பின்பு மருத்துவமனையிலேயே மேலும் 12 வாரங்கள் தங்க வைக்கப்பட்ட தாய் 36 மாத நிறைவில் மீண்டும் சிசேரியன் மூலம் குழந்தையை இரண்டாம் முறையாக பெற்றெடுத்தார்.

முதன்முறை வெளியே எடுக்கும் போது 538 கிராம் எடையே இருந்த அந்த பெண் குழந்தை மறுபிறப்பில் 2.4 கிலோ எடையுடன் பிறந்தது. sacrococcygeal teratoma எனப்படும் வாயில் நுழையாத விட்ட குறை தொட்ட குறை சதைக்கட்டியுடன் பிறந்த அந்த குழந்தையின் எஞ்சிய சதைக்கட்டியும் பிரசவத்திற்கு பின் அகற்றப்பட்டு 8 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பின் தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவரீதியாக 2 முறை பிறந்த குழந்தை 'லின்லீ போய்மர்' (Lynlee Boemer) தான் வளர்ந்த பின் தன் பிறப்பு வரலாற்றை அறிய வரும் போது அடைய இருக்கும் மகிழ்ச்சியை நினைத்து பெற்றோரும் உற்றாரும் தற்போதே பூரிப்படைந்துள்ளனர்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.