"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
27/10/16

உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம்.

பொதுவாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றத்தை வைத்து எளிதாக உங்கள் உடல்நல மாற்றத்தை கண்டறிந்துவிடலாம். உடல்நிலை சரியில்லை எனும் போது முதலில் சிறுநீர் பரிசோதனை செய்வதற்கு காரணமும் இதுதான்.

நாட்டு வைத்தியம் செய்பவர்கள் கூட சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன பாதிப்பாக இருக்ககூடும் என்பதை கணித்துவிடுவார்கள்.
எனவே, நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அண்ணாந்து விட்டத்தை பார்ப்பதை தவிர்த்து சிறுநீரின் நிறம் சரியாக தான் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.

01. மந்தமாக வெளியாகுதல்.
உங்கள் சிறுநீர் மந்தமாக வெளிப்படுகிறது என்றால் அது உங்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முன்னறிவுப்பு ஆகும். வெள்ளை இரத்த அணுக்கள் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தால் தான் இந்த மாதிரி சிறுநீர் வெளிப்படும்.

02. இரத்தம் கசிதல்.
சிறுநீர் கழிக்கும் போதும் சிவப்பு நிறமாகவோ அல்லது இரத்தம் கசிவது போலவோ இருந்தால் உங்கள் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

03. நுரை போன்று வெளிபடுதல்.
சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிபடுதல், நீரிழிவு அல்லது சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். இது ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரகம் சரியாக புரதச்சத்திணை வடிகட்டாது செயல்படுவதுதான் என கூறப்படுகிறது.

04. பழுப்பு நிறத்தில்.
கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் முன்னறிவிப்பு தான் சிறுநீர் பழுப்பு நிறமாக வெளிப்படுவது என்று கூறப்படுகிறது. மற்றும் பித்தச்செம்பசையின் (bilirubin) காரணமாக கூட ஒருவகையில் காரணமாக இருக்கலாம். இவ்வாறான நிற மாற்றங்கள் சிறுநீரில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவிரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.