27/10/16

நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த இருவேறுபட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களாக மாறுகிறது.
எனவே நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.
பால் மற்றும் பழங்கள்
பழங்கள் சாப்பிடால் அது விரைவாக செரிமானம் ஆகிவிடும். ஆனால் பால் உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
எனவே இந்த இரண்டு பொருட்களாயும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படும்.

பால் மற்றும் முள்ளங்கி
பால் வகை உணவுகள் குளிர்ச்சியானவை, முள்ளங்கி சூடான உணவு வகையைச் சேர்ந்தது.
இந்த இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே இந்த உணவுப் பொருட்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மீன் மற்றும் பால்
மீன் மற்றும் எந்த ஒரு இறைச்சி உணவு உண்ணும் போதும் பால் அருந்துவது கூடாது.
ஏனெனில் இந்த உணவுகள் நமது உடலில் நச்சுக்களை ஏற்படுத்தி, உணவு ஒவ்வாமை (Food Poisoning) போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
நெய் மற்றும் தேன்
நெய் குளிர்ச்சியையும், தேன் சூட்டையும் நமது உடலுக்கு தருகிறது. எனவே இவை இரண்டை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
பழங்கள் மற்றும் மாவுப்பொருட்கள்
பழங்கள் சாப்பிடும் போது உருளைக்கிழங்கு, சீஸ், வறுத்த உணவுகள் போன்ற மாவு வகை உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது. இதனால், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மெலன் உணவு மற்றும் தானியங்கள்
செரிமானத்தை கடினமாகும் மற்றொரு கலவை உணவுகளாக இந்த மெலன் பழங்கள் மற்றும் தானிய உணவுகள் உள்ளது. எனவே இந்த உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.