25/10/16

பயணிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதில் திருச்சி விமான நிலையம் தேசிய அளவில் 6-ல் இருந்து 7-வது இடத்துக்கு பின் தங்கியுள்ளது. இப்பட்டியலில் கோவைக்கு 8-வது இடமும், மதுரைக்கு 14-வது இடமும் கிடைத்துள்ளது.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் உள்ள விமான நிலையங்கள் தவிர, நாடு முழுவதும் 54 இடங்களில் இரண்டாம் நிலை (நான்-மெட்ரோ) விமான நிலை யங்கள் உள்ளன. இவற்றில் பயணிகளுக்கு அளிக்கப்படும் சேவைகளின் தரம் குறித்து 6 மாதத்துக்கு ஒருமுறை (ஏதேனும் ஒரு மாதத்தில்) இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் சார்பில் சர்வே நடத்தப்படும்.

இதில், விமான நிலையப் பணியாளர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், சுங்கம் மற்றும் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் பயணிகளிடம் நடந்துகொள்ளும் முறை, விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த அறி விப்பு, பார்க்கிங் வசதி, டிராலி வசதி, காத்திருப்பு நேரம், உணவக வசதி, வங்கிகள், ஏடிஎம் மற்றும் பணம் பரிமாற்ற மையங்கள், ஷாப்பிங் வசதி, இலவச வைஃபை வசதி, கழிப்பிட வசதி, சுகாதாரம், அவசர ஊர்தி வசதி, விமானத்தில் கொண்டுவரும் பொருட்களை ஒப்படைக்கும் வேகம் உட்பட 33 வகையான கேள்விகளுக்கு, பயணிகளிடம் இருந்து பதில் பெறப்படும்.

சண்டிகருக்கு முதலிடம்
அதன் அடிப்படையில், தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதன்படி, 2016-ம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரை அரையாண்டுக்கான சர்வே முடிவுகளை இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில், கடந்த அரையாண்டைப் போலவே, தற்போதும் சண்டிகர் (4.86 புள்ளிகள்), ராய்ப்பூர் (4.82), உதய்ப்பூர் (4.72) ஆகிய விமான நிலையங்கள் முறையே முதல் 3 இடங்களைத் தக்க வைத் துக்கொண்டுள்ளன.

கடந்த அரையாண்டில் 6-வது இடம் பிடித்திருந்த திருச்சி விமான நிலையம் தற்போது 4.68 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த முறை 10-வது இடத்தில் இருந்த கோவை விமான நிலையம் 4.67 புள்ளிகளு டன் 8-வது இடத்துக்கும், 15-வது இடத்தில் இருந்த மதுரை விமான நிலையம் 4.51 புள்ளிகளுடன் 14-வது இடத்துக்கும், 36-வது இடத்தில் இருந்த தூத்துக்குடி விமான நிலையம் 4.19 புள்ளிகளு டன் 33-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளன.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘திருச்சி விமான நிலை யத்தில் பயணிகளுக்கான வசதிகள் இன்னும் விரிவுபடுத்தப்படும். அடுத்த அரையாண்டில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றனர்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.