17/8/16

இஸ்லாமிய மக்கள் மதுபானம் அருந்துவது குறைவு என்றும் எமது நாட்டில் இவர்கள் மதுபானம் அருந்துவது குறைந்தளவிலே காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் ஹலால் ஹராம் காரணங்களால் இவர்கள் மது அருந்துவதை தவிர்ப்பதாகவும் இதனால் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாட்டில் உள்ள அனைவரையும் மது பாவனையில் இருந்து மீட்டெடுக்கவும் மது பாவனையற்ற நாடாக இலங்கையை மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு மகாசங்கத்தினருக்கு அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிலிருந்து மது பாவனையை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என்றும் எனவே இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க மகா சங்கத்தினரின் தலையீடு அவசியம் என்பதால் அவர்களை அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>