28/8/16

புனித கஃபதுல்லாஹ்வை சுற்றி போர்த்தப்பட்டுள்ள 'கிஸ்வா' எனும் கைவினை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கருப்புத்துணி ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்படும். அதன்வழி, இந்த ஆண்டு 'கிஸ்வா' எதிர்வரும் துல்ஹஜ் பிறை 9 அன்று சுபுஹூ தொழுகைக்குப் பின் மாற்றப்படவுள்ளது.

துல்ஹஜ் பிறை 9 அன்று ஹஜ் யாத்ரீகர்கள் அனைவரும் மினா கூடாரங்களில் தங்கியிருக்கும் சமயம், அதாவது சுபுஹூ தொழுகை முடிந்தவுடன் ஆரம்பமாகும் பணி அஸர் தொழுகைக்குள் முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கிஸ்வா குறித்த சில தகவல்கள்:
சுத்தமான 700 கிலோ கருப்பு பட்டாடையில் சுமார் 120 கிலோ தங்கம் வெள்ளி ஜரிகை கைவினை வேலைப்பாடுகளுடன் 47 துண்டுகளாக தயாரிக்கப்படும். ஒவ்வொரு துண்டும் 14 மீட்டர் நீளத்திலும் 101 செ.மீ அகலத்திலும் இருக்கும்.

உலகிலேயே மிகப்பெரிய கணிணிமயப்படுத்தப்பட்ட 16 மீட்டர் நீள தையல் இயந்திரத்தில் பல்துறையை சேர்ந்த 240 கைவினையில் சிறந்த ஊழியர்களின் உழைப்பில் சுமார் 2 மாத கால அளவில் தயார் செய்யப்படுகிறது.

கஃபாவின் நான்குபுறமும் போர்த்தப்படும் கிஸ்வா, இறுதியாக தரையில் அமைக்கப்பட்டுள்ள செம்பு வளையங்களில் இணைத்துக் கட்டப்படும்.


செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.