சில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி காணப்படும். தாடை பகுதி, தாடிக்கு கீழ், வாய்க்கு மேல் என மெலிசாக அல்லது சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி தோன்றும்.
இது ஏன் ஏற்படுகிறது என அறியாமலேயே சில பெண்கள் ஷேவிங், வேக்ஸிங் செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர். ஷேவிங் வேக்ஸிங் செய்வதால் முடி வளர்ச்சி தூண்டிவிடப்பட்டு அடர்த்தியாக வளரவும் வாய்ப்புகள் உண்டு என்பதை பெண்கள் மறந்துவிட கூடாது.
சில மருத்துவ நிலைகள், மற்றும் உட்கொள்ளும் சில மருந்துகளின் காரணங்களால் கூட முடி வளர்ச்சி தூண்டிவிடப்படலாம். எனவே, முதலில் ஏன் முகத்தில் முடி வளர்ச்சி தோன்றுகிறது என பெண்கள் கண்டறிய வேண்டும். பிறகு, அதற்கான தனிப்பட்ட சிகிச்சைகள் மூலம் வளர்ச்சியை தடுக்கும், குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
இந்தியா, மத்திய தரைக்கடல், கிழக்கு ஆசியா, ஐரோப்பிய பெண்களுக்கு தான் அதிகமாக தேவையற்ற முடி வளர்ச்சி முகத்தில் தோன்றுகின்றன. இதற்கு காரணம் மரபணு அல்லது இனத்தின் பாரம்பரியம் என ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.
சில மருத்துவ நிலை தாக்கம் ஆண்களுக்கான ஹார்மோனை பெண்கள் உடலில் அதிகமாக சுரக்க செய்யும். இதனால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையால் முகத்தில் முடி வளர வாய்ப்புகள் உண்டு!
உட்கொள்ளும் சில மருந்துகளின் தாக்கம் கூட உடல் மற்றும் முகத்தில் அதிக முடி வளர்ச்சியை தூண்டும். இதன் காரணமாக கூட பெண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சி தோன்றலாம். சில வகை ஸ்டெராய்டுகள் கூட இந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பெண்களின் முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க மற்றுமொரு காரணமாக இருப்பது ஆண்ட்ரோஜன்கள் வளர்ச்சி. ஆண்ட்ரோஜன்கள் ஆண்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்.
ஆனால்,பெண்களின் உடலிலும் சிறியளவு ஆண்ட்ரோஜன்கள் இருக்கும். ஏதேனும் தூண்டுதலால் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் போது முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.
கருத்தடை மாத்திரைகள் கூட ஆண்ட்ரோஜன்கள் வளர்ச்சியை தூண்டலாம். இதனாலும், பெண்களின் முகத்தில் திடீரென முடி வளர்ச்சி தோன்றவும் / அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.
வலிப்பு, ஒற்றைத்தலைவலி, மனச்சிதைவு நோய், உயர் இரத்த அழுத்தம், போன்ற வேறு காரணங்களாலும் கூட பெண்களின் முகத்தில் முடியின் வளர்ச்சி தோன்ற வாய்ப்புகள் உண்டு.
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.