1/8/16

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பகுதியை சேர்ந்த 3 பேர் பைக் மூலம் திருச்சியிலிருந்து லப்பைக்குடிக்காடு நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு (ரஞ்சன்குடி செல்லும் பாதையில் நேற்று இரவு 7:30 மணியளவில்) இருசக்கர வாகனத்தில் வந்த லப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் முன்னால் சென்ற லாரியை முந்திச் சென்ற போது நிலை தடுமாறி எதிரே இருந்த பேருந்து நிறுத்த பெயர்ப் பலகையில் மோதி கீழே விழுந்தனர்.

இரண்டு பேர் வபாத்!

இந்திய தேசியலீக் கட்சியின் லப்பைக்குடிக்காடு நகர பொருலாளருமான முஹம்மது இக்பால் அவர்களின் தம்பி முஹமது ஹாலித் தந்தை பெயர் சர்தார்.. மற்றும் அவரது நண்பர் ஜெய்னுல்லாபிதீன் தந்தை பெயர் அக்பர் அலி ஆகிய இருவரும் வாகண விபத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

ஹமருல்லா த/பெ நஸ்ருல்லா என்பவருக்கு காலில் படு காயம் ஏற்பட்டது.

கடந்த ரமலானில் இதுபோன்று கீழக்கரையில் நிகழ்ந்த விபத்தின் வடு மறைவதற்க்குள் இந்த இரண்டு இளைஞர்களின் மரணம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சகோதரர் முஹமது ஹாலித்,ஜெய்னுல்லாபி தீன் ஆகியோர்களின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துவா செய்யுங்கள் சகோதரர்களே...!

(அன்னாரின் மஃபிரத்திற்காக து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல்
பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ
செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார்
உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

குறிப்பு-  லப்பைகுடிகாடு, வி.களத்தூர் சகோதரர்கள்  பைக்கில் செல்லும்போது கவனமாக செல்லவும். ஹெல்மெட் அணிந்து பைக் ஒட்டவும்.
 


செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

1 comments:

  1. mohamed ansari01 ஆகஸ்ட், 2016

    Fast work.keep it. I like the advise to young sters too. Be safe.wear helmet please

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.