31/7/16

ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி அல்லாஹ் மிக பெரியவன் மாவட்ட நிர்வாகத்தின் தீர்ப்புக்கு நீதி மன்ற  தடை ஆணை வாங்கிய திருப்பூர் மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு !!
 
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பள்ளிவாசல் பிரச்சனை சில இந்துத்துவ அமைப்புகள் அவதூறு மூலம் நீதிமன்றம் சென்று பள்ளி மீது தீர்ப்பு பெற்று அதனை உடனே மூட வேண்டும் என திருப்பூர் மாவட்ட அரசு நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது அதற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம் கூடுகிறது கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் இந்திய தவ்ஹித் ஜமாஅத் தமுமுக மமக எஸ் டி பி ஐ முஸ்லிம் லீக் வெல்பர் பார்ட்டி ஜமாத்துல் உலமா என நிர்வாகிகள் பங்கேற்று தொடர்ந்து திருப்பூரில் பல பள்ளிவாசலில் பிரச்சனை இந்துத்துவ அமைப்புகள் மூலம் நடக்கிறது அதற்கு ஆதராவாக மாவட்ட அரசு நிர்வாகம் செயல் படுவது கண்டிக்க தக்கது இதை முறையாக அணுக வேண்டும் என முடிவு செய்ய பட்டு முடிக்கும் நிலையில் திடீரென !

மாநகராட்சி ஆணையாளர் பள்ளிவாசல் மீது ஒரு நோட்டிஸ் கொடுத்து உள்ளார் அதில் மூன்று நாள் அதாவது இன்று வெள்ளிக்கிழமை உடன் பள்ளிவாசல் மூட வேண்டும் இல்லை என்றால் நாங்கள் மூடுவோம் என தகவல் வந்த உடனே திருப்பூர் கமிஷனர் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து நீங்கள் எந்த சட்டம் ஒழுங்கு நடவடிக்கை இல்லாமல் வெள்ளிக்கிழமை மூடி விடுங்கள் என கூறினார் இதை அடுத்து முதலில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் நீதிமன்றம் தீர்ப்புக்கு தடை ஆணை பெறும் வேலை பார்ப்பது இன்னொரு பக்கம் இறை இல்லத்தின் மீது அவதூறு கூறும் இந்துத்துவ அமைப்புகளை கண்டித்து வெள்ளி கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்து வேலைகள் மிக வேகமாக நடந்தது !!

பின்னர் பிரச்சனை பெரிதான உடனே வியாழன் அன்று காலை கமிஷனர் அவர்கள் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து இந்த நேரத்தில் போராட்டம் வேண்டாம் நீங்கள் போராட்டம் செய்வதால் பள்ளிவாசல் சட்ட பிரச்சனை இன்னும் சிக்கல் ஆகும் என கூறினார் ஆனால் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் போராட்டம் செய்வதில் மிக தெளிவாக இருந்தன பின்னர் திருப்பூர் பிரச்சனை அனைத்து ஊர்களில் எதிரொலிக்க ஆரம்பித்த உடனே மேலும் இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் மூத்த தலைவர் ஹைதர் அலி எஸ் டி பி ஐ தலைவர் தெக்லான் பாக்கவி முஸ்லிம் லீக் எம் எல் ஏ அபூபக்கர் வெல்பர் பார்டி தலைவர் சிக்கந்தர் என இஸ்லாமிய தலைவர்கள் பெரிய அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகள் என தொடர்பு கொண்டு முதலமைச்சர் கவனத்திற்கு இந்த விசயத்தை கொண்டு சென்ற போது ஏற்கெனவே முதலமைச்சர் தனி பிரிவுக்கு மெயில் மூலம் போன தகவல் !!

மற்றும் திருப்பூர் மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகளின் பணிகள் போரட்டத்தின் வீரியம் என அனைத்தையும் பார்த்த அரசு இன்னொரு பக்கம் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் நீதிமன்றம் அணுகுமுறை என அனைத்தும் ஆலோசனை செய்து மீண்டும் நேற்று இரவு அனைத்து அதிகாரிகளும் பத்து மணிக்கு அழைத்து போராட்டம் நடத்த வேண்டாம் சட்ட ரீதியாக செல்லுங்கள் என்று கூறிய போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் எங்கள் முடிவை பரிசிலனை செய்கிறோம் என்று கூறி விட்டு அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் 12.30 மணிக்கு திரும்பி வந்தனர் காலை ஒன்பது மணிக்கு மாவட்ட அரசு நிர்வாகம் நீங்கள் தடை ஆணை பெறுங்கள் அது வரை நாங்கள் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை முறையாக அந்த கட்டிடத்தை அனுமதி நாங்கள் வழங்கு கிறோம் என்று கூறினார்கள் இதனை அடுத்து !!


அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு கூட்டம் கூடி அரசு நமக்கு தேவையானதை செய்து கொடுப்பதால் போராட்டத்தை ஒத்தி வைக்கலாம் என முடிவு செய்து அறிவிக்க பட்டது அடுத்து அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் நீதிமன்றம் சென்ற விசயம் ஏற்கெனவே இந்துத்துவ அமைப்புகள் மூலம் வாங்கிய தீர்ப்புக்கு தடை ஆணை தற்போது பெற பட்டுள்ளது !!


அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் நிர்வாகிகள் இந்திய தவ்ஹித் ஜமாஅத் தமுமுக மமக எஸ் டி பி பி எப் ஐ முஸ்லிம் லீக் வெல்பர் பார்ட்டி மற்றும் ஜமாஅத துல் உலமா அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத் என அனைவரும் சுய நலம் இல்லாமல் ஒற்றுமை உடன் வீரியத்துடன் கடந்த ஒரு வாரமாக பம்பரமாக வேலை செய்ததன் பலன் அல்லாஹ்வின் மிக பெரிய உதவி வேலம்பாளையம் பள்ளி பிரச்சனை சுமுகமாக முடிந்து உள்ளது இன்னும் சட்ட ரீதியான பிரச்சனை அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மூலம் பார்க்க பட்டு வருகிறது !!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கு !!

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>