30/6/16

சென்னையில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டதும் உங்களைப் போலவே நானும் அதிர்ச்சிக்குள்ளானேன்,
வருத்தப்பட்டேன். ஐடி படித்துக் கொண்டிருக்கும் என் தங்கை நியாபகம் எனக்கு வந்து போனது.

சுவாதி போன்ற, என் தங்கை போன்ற இன்னும் பல பெண்களின் பாதுகாப்பை இந்த அரசும் சமூகமும் எப்படி உறுதி செய்யப்போகிறது என்னும் கவலை உங்களைப் போலவே எனக்கும் இருக்கிறது.

குற்றவாளியை இன்னும் பிடிக்கவில்லை என்று கேள்விப்பட்டவுடன் எனக்கும் உங்களைப் போலவே கோவம் வந்தது.

ஒரு சிசிடிவி கேமரா கூட வைக்காமல் என்ன பண்ணிட்டு இருந்தாங்க என்று உங்களைப் போலவே எனக்கு ஆத்திரம் வந்தது.
நுங்கம்பாக்கத்தில் சுவாதிக்கு அஞ்சலிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ரயி்லில் இறங்கி கடந்து செல்கையில், நானும் உங்களைப் போலவே ஒரு 5 நிமிடம் அங்கு நின்று மெழுகுவர்த்தி எந்தினேன்.

உங்களைப் போலவே, சுவாதி எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று எனக்கும் தெரிந்திருக்கவில்லை, அன்று அந்த வாட்ஸ்-அப் தகவலை பார்க்கும் வரை.
கொலைகாரன் நான் தான் என்றும் இது லவ் ஜிகாத் கொலை என்றும் வேகமாக ஒரு செய்தி பரவியது.

கொலைகாரனின் அடையாளம் தெரியவில்லை என்று பொலிஸ் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அது எப்படி இந்த செய்தி போட்டவர்களுக்குத் தெரிந்தது. அதுவும் பெயருடன்??

உலகில் எத்தனையோ பெயர்கள் இருக்கும்போது, என் பெயரை ஏன் இவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்??

நான் குல்லா போட்டிருப்பதாலா?
தாடி வைத்திருப்பதாலா?
ரம்ஜான் நோன்பு வைப்பதாலா?
என் சகோதரி பர்தா போட்டிருப்பதாலா?
நான் இஸ்லாமியனாக இருப்பதாலா?



கோகுல்ராஜ் கொலையான போது அது கவுண்டர் சமூக எதிர்ப்பாக மாறவில்லை. சங்கர் படுகொலை செய்யப்பட்டபோது, அது கள்ளர் சமூக எதிர்ப்பாக மாறவில்லை.

தினம் தினம் இந்த நாட்டில் என் தலித் சகோதரர்களும், சகோதரிகளும் தாக்கப்படும் போது, தாக்கியவர்களின் சாதி சமூகம் மேல் வெறுப்பு பிரசாரம் செய்யப்படுவதில்லை.

ஆனால், இன்று திடீரென்று சுவாதி கொலைக்கு சம்பந்தமில்லாத என் மீதும், என் குடும்பம், நண்பர்கள், சமூகத்தினர் மீதும் வெறுப்பும், கோபமும், எதிர்ப்பும் பரப்பபடுவது ஏன்?

ஏற்கெனவே, செய்யாத குற்றத்திற்காக பல ‘பிலால் மாலிக்’குகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாகவே சிறைகளில் தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் மற்றுமொரு பிலால் மாலிக்கா?? போதும் நண்பர்களே…
உங்களைக் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். இந்த பிலால் மாலிக்குக்கும் உங்களைப் போலவே வாழ்க்கை இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. நண்பர்கள் இருக்கிறார்கள்.

உங்களோடு கூடவே வாழ்க்கைப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் எங்களைத் தாக்க ஒரு மதவெறிக் கூட்டம் ஆயுதங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த அச்சுறுத்தலில் இருந்து உங்கள் சகோதரன் இந்த பிலால் மாலிக்கை காப்பாற்ற கரம் கொடுங்கள்.

கொலைகாரன் பிடிபட வேண்டும். அவனுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று உங்களைப் போலவே பிரார்த்திக்கும்…
பிலால் மாலிக்.
அஸ்ஸலாமு அலைக்கும்..

இது வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் ஒரு பதிவு.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>